Thursday, January 12, 2012

நொக்கியா,விண்டோஸ் கூட்டணியின் அடுத்த வெளியீடு: 'லுமியா 900' !


நொக்கியா மற்றும் விண்டோஸ் நிறுவனங்கள் இணைந்து ஏற்கனவே இரண்டு கையடக்கத்தொலைபேசிகளை வெளியிட்டன.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிய போதிலும் இவற்றல் பெரிதாக எதனையும் சாதிக்கமுடியவில்லை.மிகப்பெரிய இரு நிறுவனங்களின் கூட்டுத்தயாரிப்பாக இருந்தபோதிலும் ஐ போன் 4S மற்றும் செம்சுங் கெலக்ஸி எஸ் 2 ஆகியவற்றின் விற்பனையை முந்தமுடியவில்லை.இந்நிலையில் நொக்கியா தனது அடுத்த வெளியீடான நொக்கியா லுமியா 900 கையடக்கத்தொலைபேசியை வெளியிட்டுள்ளது.
இது தோற்றத்தில் லுமியா 800 ஐ ஒத்திருந்த போதிலும்சற்று பெரியது. விண்டோஸ் 7.5 மெங்கோ தொகுப்பின் மூலம் இயங்கும் இது 8 மெகாபிக்ஸல் கெமராவினையும் கொண்டது.இதனைத்தவிர 4.3 அங்குல AMOLED திரையைக் கொண்டிருப்பதுடன், 1 மெகாபிக்ஸல் Front கெமராவினையும் கொண்டுள்ளது.
இ.எஸ்.பின், சி.என்.என். உட்பட அப்ளிகேஷ்ன்களையும் கொண்டு வெளியாகவுள்ளது இம்மாதிரி4ஜி வலையமைப்பில் இயங்கக்கூடியதாகவும் இது தயாரிக்கப்பட்டுள்ளமையானது சிறப்பானதொரு அம்சமாகும்.இம் மாதிரியாவது நொக்கியாவுக்கு கைகொடுக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF