
ஜேர்மனியில் உள்ள முயன்ஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டீபன் ஸ்கலாட் தலைமையிலான சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஆய்வகத்தில் எலிகளின் உயிரணுவை உருவாக்க ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
எலிகளின் ஜெர்ம் செல்களில் இருந்து அவற்றை தயாரித்துள்ளனர். அவை நல்ல சத்தானவையாகவும், மரபணு பாதிப்பு இல்லாதவையாகவும் உள்ளன.
எனவே இவற்றின் மூலம் எலிக் குட்டிகளை உருவாக்க முடியும் என இக்குழுவின் இஸ்ரேல் விஞ்ஞானி மகமூத் ஹலேகெல் தெரிவித்துள்ளார்.மேலும் இதே முறையில் ஆண்களின் உயிரணுக்களையும் உருவாக்க முடியும் என்றும், இதன் மூலம் ஆண்மையற்ற ஆண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.அதற்கான ஆய்வுகள் பரிசோதனை கூடத்தில் நடந்து வருகின்றன. தற்போது அவை தோல்வி அடைந்தாலும், விரைவில் அதில் வெற்றி பெறுவோம் என்று விஞ்ஞானி ஹலேகெல் தெரிவித்துள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF