Wednesday, January 25, 2012
பேக்ஸ் சாதனம்இல்லாமலேயே உங்கள் கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கு அல்லது ஒரு பேக்ஸ் இயந்திரத்துக்கு Faxஅனுப்பலாம்!
அனுப்புவது மட்டுமல்லாமல் பேக்ஸ் செய்தியை கணினி மூலம் பெறவும் (receive) முடிகிறது.இதற்குத் தேவையானது மோடெம் பொருத்தப்பட்ட ஒரு கணினி, ýýதொலைபேசி இணைப்பு மற்றும் பேக்ஸ் அனுப்புவதற்கான மென்பொருள் (faxing software) என்பனவே. பேக்ஸ் அனுப்புவதற் கென WinFax, Bitware என ஏராளமன பேக்ஸ் அனுப்பும் மென்பொருள்கள் பாவனையிலுள்ளன.
விண்டோஸ் எக்ஸ்பியில் பேக்ஸ் அனுப்புவதற்கான மென்பொருள் உள்ளிணைக்கப்பட்டுள்ளதால் வேறு மென்பொருள்களை நிறுவ வேண்டியதில்லை.Windows XP யில் பேக்ஸ் அனுப்புவதற்கான மென்பொருள் ஏற்கனவே உள்ளிணைக்கப்பட்டிருந்தாலும் அதனை முதன் முதலில் நிறுவும் போது பேக்ஸ் அனுப்புவதற்குத் தேவையான பைல்கள் நிறுவப்படுவதில்லை. எனவே அதனை நீங்களாகவே install செய்தல் வேண்டும். அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.முதலில் Start பட்டனில் க்ளிக் செய்து வரும் Start menu ல் Printers And Fax தெரிவு செய்யுங்கள். அப்போது திறக்கும் விண்டோவில், நீங்கள் ஏற்கனவே பிரின்டர்கள் இன்ஸ்டோல் செய்திருந்தால் அதற்கான ஐக்கன்களைப் பார்க்கலாம். இப்போது அந்த விண்டோவின் இடது பக்கத்தில் இருக்கும் Printer Task எனும் பகுதியில் Setup Faxing என்ற கட்டளை இருப்பதைக் காணலாம். அதில் க்ளிக் செய்ய ஒரு Message Box தோன்றி விண்டோஸ் எக்ஸ்பி சீடீயை உட்செலுத்துமாறு சொல்லும். அப்போது விண்டோஸ் எக்ஸ்பீ சீடியை உட்செலுத்த, தேவையான பைல்கள் FரA செய்யப்படும். இப்போது பேக்ஸ் சாதனம் போன்ற ஒரு ஐக்கன் அந்த விண்டோவில் வந்திருப்பதைக் காணலாம் .
கன்ட்ரோல் பேனலில் Printer and Fax ஐக்கனைத் திறப்பதன் மூலம் அல்லது Add / Remove Programs ஐக்கனை திறக்க வரும் விண்டோவில் Add or Remove Windows Components தெரிவு செய்வதன் மூலம் வரும் டயலொக் பொக்ஸில் Fax Services தெரிவு செய்து Next க்ளிக் செய்வதன் மூலமாகவும் இதே இடத்துக்கு வந்து சேரலாம்.எவ்வாறு பேக்ஸ் அனுப்புவது? Printer and Fax விண்டோவில் இப்போது Setup A Fax என்ற கட்டளை தோன்றியிருக்கும். அதில் க்ளிக் செய்ய Welcome to Fax Configuration Wizard வரக் காணலாம். அதில் Sender Information ல் உங்கள் விருப்பப்படி விபரங்க¨ளைப் பூர்த்து செய்து Next க்ளிக் செய்யவும். தொடர்ந்து வரும் கட்டத்தில் Enable Receive, Enable Send இரண்டையும் தெரிவு செய்து மீண்டும் Next கிளிக் செய்யவும்.அடுத்து TSID யாக உங்கள் பெயரையும் தொலைபேசி இலக்கத்தையும் விரும்பினால் டைப் செய்யுங்கள். இதில் டைப் செய்யும் விபரங்கள் மூலம் பேக்ஸ் கிடைக்கப்பெறுபவர் அது யாரிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளது என அறிந்து கொள்வார்.
அதேபோல் அடுத்துவரும் CSID லும் இதே விபரங்களை விரும்பினால் கொடுங்கள். இது உங்களுக்கு பேக்ஸ் கிடைக்கப்பெறும் போது அதிலுள்ள விபரங்கள் உங்களுக்கு பேக்ஸ் அனுப்புபவரை அடையும். இப்போது Next கிளிக் செய்ய வரும் Routing Option இல் கிடைக்கப் பெறும் பேக்ஸை விரும்பினால் எந்த பிரின்டரில் அச்சிட வேண்டும் என்பதைத் தெரிவு செய்யவும் அல்லது Store a copy in a folder தெரிவு செய்து, கிடைக்கப் பெறும் பேக்ஸ் செய்தியை எந்த போல்டரில் சேமிக்க வேண்டும் என்பதனையும் Browse பட்டனில் கிளிக் செய்து குறிப்பிடவும். பின்னர் Next க்ளிக் செய்ய இந்த Wizard முற்றுப்பெறும். நீங்கள் பேக்ஸ் அனுப்பும் ஒவ்வொரு முறையும் இந்த விசர்ட் வந்து தொல்லை தராது என்பது ஆறுதலான விசயமாகும்.அடுத்து நீங்கள் அனுப்பவிருக்கும் செய்தியை MS-Word போன்ற ஏதேனுமொரு Word Processor இல் டைப் செய்து கொள்ளுங்கள். பின்னர் பைல் மெனுவில் கிளிக் செய்து அதில் பிரின்ட் கமாண்டை தெரிவு செய்யவும். அப்போது வரும் பிரின்ட் டயலொக் பொக்ஸில் பிரின்டர் பெயராக Fax தெரிவு செய்வதோடு உங்கள் விருப்பப்படி Print Range தெரிவு செய்து ஓகே செய்யவும்.இப்போது Send Fax (படம்-1) என்ற விசர்ட் தோன்றும். இங்கு Next க்ளிக் செய்ய Recipient Information (படம்-2) என்ற கட்டத்தில் பேக்ஸ் கிடைக்கப்பெறுபவரின் பெயர், தொலைபேசி இலக்கம் என்பவற்றை உரிய இடத்தில் டைப் செய்யவும். Use dialing rules என்பது தெரிவு நிலையில் இருந்தால் அதனை நீக்கி விடவும்.
உங்கள் பேக்ஸை ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு அனுப்புவதாயின் Add பட்டனில் க்ளிக் செய்து ஒவ்வொருவரினதும் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்களை டைப் செய்து Next க்ளிக் செய்யவும்.அடுத்த கட்டமாக உங்கள் பேக்ஸ் செய்தியுடன் ஒரு Cover Page இணைத்து அனுப்ப விரும்பினால் Select a cover page template with the following information (படம்-3) என்பதைத் தெரிவு செய்து தேவையான தகவல் களை டைப் செய்யவும். (எனினும் Cover Page ஐத் தவிர்ப்பது நல்லது) அடுத்து Next க்ளிக் செய்ய Schedule (படம்-4) என்ற கட்டம் தோன்றும். அதில் எப்போது பேக்ஸை அனுப்ப வேண்டும் என்பதில் உங்கள் விருப்பம் போல் நேரத்தைத் தெரிவு செய்யலாம். உடனடியாக அனுப்புவதாயின் Now என்பதையும் Fax Priority யில் Normal என்பதையும் தெரிவு செய்து Next க்ளிக் செய்ய விசர்ட் இறுதிக் கட்டத்துக்கு (படம்-5) வரும். இங்கு Finish க்ளிக் செய்ய Fax Monitor (படம்-6) என்ற டயலொக் பொக்ஸ் தோன்றுவதையும் உங்கள் கணினி நீங்கள் கொடுத்த தொலைபேசி இலக்கத்துக்கு டயல் செய்ய ஆரம்பிப்பதையும் பின்னர் சிறிது நேரத்தில் இணைப்பு கிடைத்ததும் பேக்ஸ் அனுப்பப்படுவதையும் அவதானிக்கலாம்.
இதேபோல் உங்களுக்கு அனுப்பப்பட்டும் பேக்ஸ் செய்தியைப் பெறுவதானால் Start → Programs → Accessories → Communication → Fax →Fax க்ளிக் செய்ய வரும் விண்டோவிலுள்ள பைல் மெனுவில் Receive a fax தெரிவு செய்யவும். அப்போது பேக்ஸ் மொனிட்டர் தோன்றுவதையும் உங்கள் கணினியில் உள்ள மோடெம் டயல் செய்யப்படுவதையும் அவதானிக்கலாம். உங்களுக்கு வரும் பேக்ஸ் நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட போல்டரில் சேமிக்கப்படும். அதனை Fax Console விண்டோவில் inbox கிளிக் செய்து பார்வையிடலாம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF