Monday, January 16, 2012

கொண்டை ஊசியை விட மிகவும் சிறிய கணினிகள் விரைவில் அறிமுகம்!


இன்றைய பாவனையில் இருக்கும் சுப்பர் கணினிகளை விடவும் அதி திறமை வாய்ந்ததும் அதேநேரம் பெண்கள் பயன்படுத்தும் கொண்டை ஊசியை விட சிறியதுமான கணினிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.


இக்கணினிகள் நான்கு அணுக்களின் அகலத்தையும், ஒரு அணுவின் உயரத்தையும் பருமனாக கொண்ட மின் வடங்களை பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன.அதாவது இந்த மின்வடங்கள் சிலிக்கன் படிமத்திற்குள் வைக்கப்பட் பொஸ்பரஸ் சங்கிலிகளை உள்ளடக்கியதும், மனிதனின் தலைமுடியைவிட 10,000 மடங்கு மெல்லியவையாகவம் காணப்படுகின்றன. இவ்வகையான மின்வடங்களை உற்பத்திசெய்வற்காக விஞ்ஞானிகள் நுண்ணூடுவல் ஸ்கானிங் எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF