
வெள்ளை உலோகம் என அழைக்கப்படும் பிளாட்டினம் மிக அரிதான ஒன்று. தங்கத்தை விட விலை உயர்ந்தது மட்டுமல்ல மதிப்புமிக்கது, அழகானது, தனிதன்மையானது, எனவேதான் பிளாட்டினம் அனைவராலும் விரும்பபடும் ஆடம்பர விலை உயர்ந்த பொருளாக கருதபடுகிறது.
பல்லேடியம்,ஓஸ்மியம், போடியம், இரிடியம், ருத்னியம் போன்றவை "பிளாட்டினத்தின் " குடும்ப வகைகள்.10 டன் உலோக தாதுவிலிருந்து ஒரு அவுன்ஸ் மட்டுமே பிளாட்டினத்தை பிரித்தெடுக்க முடிகிறது எனவேதான் இது விலை உயர்ந்ததாக இருக்கிறது.ஸ்ட்ரெப்டோமைசின் போன்ற மருந்து தயாரிப்பில் சிறந்த ஊக்கியாகப் பயன்படுகிறது. செயற்கை வைட்டமின்கள், கேன்சருக்கான சிஸ்ப்ளாட்டின் என்ற மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது. பிளாட்டினம் அதிக வெப்பத்தை தாங்ககூடிய உலோகமாகும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF