இந்த 26 கிரகங்களும் 11 நட்சத்திரங்களை சுற்றி வருகின்றன. சில நட்சத்திரங்களை ஒரு கிரகமும், சில நட்சத்திரங்களை 5 கிரகங்களும் சுற்றிக் கொண்டுள்ளன. இதில் ஒரு கிரகம் தனது நட்சத்திரத்தை, மிக மிக நெருக்கமாக சுற்றிக் கொண்டுள்ளது. இது சூரிய குடும்பத்தின் முதல் கிரகமான புதனுக்கும், சூரியனுக்கும் இடையிலான தூரத்தை விடக் குறைவாகும்.இதனால் அதில் பயங்கர அளவிலான வெப்பம் நிலவும் என்பதால் உயிர்கள் வாழ வாய்ப்பில்லை. மற்ற கிரகங்களும் மிக நெருக்கமாக நட்சத்திரங்களை சுற்றி வருவதால் அவையும் உயிர்களை சுமந்திருக்க வாய்ப்பில்லை என்கிறது நாசா. இந்த கோள்களில் சில 6 நாட்களுக்கு ஒரு முறையும், சில 143 நாட்களுக்கு ஒரு முறையும் தங்களது நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன.




பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF