
ஒழுக்கத்தை கற்பிப்பதாக கூறி பெற்றெடுத்த 12 வயதான மகளை வாய், கைகளை டேப்பால் சுற்றி, நாய் கூண்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக தந்தை பிடிபட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஸ்பிரிங்பீல்டு என்ற பகுதியில் நடந்தது.மேலும் மின்சாரத்தை கூண்டின் மீது பாய்ச்சும் செயலிலும் ஈடுபட்டார். இந்த கொடுமைக்கார தந்தையின் பெயர் ஜேம்ஸ் டாப்கி(வயது 41). இவரை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இந்த கொடுங்செயல் நிகழ்ந்த 20 நிமிடத்தில் சிறுமியை நாய் கூண்டில் இருந்து அவளது சகோதரர் மீட்டிருக்கிறார். உடனே ஆவேசம் அடைந்த தந்தை அவளது தலையில் தண்ணீரை ஊற்றி மீண்டும் நாய் கூண்டில் அடைத்து விட்டார். இந்தச் சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் பாட்டி வந்து தலையிட்டு சிறுமியை மீட்டு தனது பராமரிப்பில் வைத்துள்ளார்.
இது குறித்து பொலிசார் கருத்து தெரிவிக்கையில், மகளுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க இவ்வாறு நடந்து கொண்டதாக தந்தை கூறுகிறார். ஆனால் அவர் ஒழுக்கமற்ற முறையில் இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்ட அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளோம் என கூறியுள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF