Thursday, January 26, 2012
ஆண்ட்ரிக்ஸ் - தேவாஸ் மாபெரும் ஊழல் புகார், மாதவன் நாயர் உட்பட 4 பேருக்கு அதிரடித் தடை!
இந்திய இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உட்பட மேலும் நான்கு விஞ்ஞானிகளுக்குஅரசு பதவிகள் எவற்றிலும் நீடிக்க முடியாது என மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தெரியவருகின்றது.
இதற்கு 2ஜி ஊழலை விடவும் மாபெரும் ஊழலான ஆண்டிரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்த ஊழல் புகார்கள் நீரூபணம் ஆகியமை காரணம் என தெரியவருகின்றது.இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோவின் துணை நிறுவனமாக உருவாக்கப்பட்ட ஆண்ட்ரிக்ஸ் என்ற நிறுவனம் தேவாஸ் மல்டி மீடியா எனும் தனியார் நிறுவனத்திற்கு மிகவும்குறைந்த விலையில் 70 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து விட்டு அரசு நிறுவனங்களுக்கு அதிக விலையில் வழங்கியமை தொடர்பில் வெளிச்சத்திற்கு வந்தது இந்த மாபெரும் ஊழல் விவகாரம்.
இதனால் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட பிரதமர் மன்மோகன்சிங்க் உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த ஊழலை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவினரின் அறிக்கை மூலம் மேலும் ஊழல் நிரூபணமாகியது.அதன்படி இந்த ஊழலில் தொடர்புபட்ட முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் மற்றும் ஏனைய நால்வர் எந்த அரசு துறைகளிலும் பதவி வகிக்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF