Tuesday, January 17, 2012

ஸ்மார்ட் போன் சந்தையில் இன்டெல்!


மோட்டோரொல்லா மற்றும் லெனோவோ நிறுவனங்கள் தமது ஸ்மார்ட் போன்களில் இன்டெல் புரசசர்களை உபயோகிக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.லெனோவோ இண்டெல் புரசசரினை உபயோகித்து உருவாக்கிய ஸ்மார்ட் போன் ஒன்றினை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.ன்டெல்லின் புரசசர்களை உபயோகித்து தயாரிக்கப்படவுள்ள ஸ்மார்ட் போன்கள் அண்ட்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்டியங்குமென மோட்டோரொல்லா தெரிவிக்கின்றது.

எல்ஜியுடன் இணைந்து கையடக்கத்தொலைபேசிகளை வெளியிடவுள்ளதாக இன்டெல் கடந்த சில வருடங்களுக்கு முன்னரே திட்டமிட்டிருந்தபோதிலும் அத்திட்டம் தோல்வியிலேயே முடிந்தது.கணனி உலகில் முன்னணியில் திகழும் இன்டெல் ஸ்மார்ட் போன் சந்தையிலும் முக்கிய இடத்தினைப்பெற முயற்சி செய்து வருகின்றது.இந்நிலையில் மோட்டோரொல்லா மற்றும் லெனோவோ நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளமையானது இன்டெல்லுக்கு சிறந்த ஆரம்பமாக அமையுமெனெத் தெரிவிக்கப்படுகின்றது.


தினசரி சுமார் 700,000 அண்ட்ரோய்ட் சாதனங்கள் எக்டிவேட் செய்யப்படுவதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. எனவே அண்ட்ரோய்ட் சாதனங்களுடன் இன்டெல் புரசசர்கள் இணைவது அதற்குக் கூடிய பலம் சேர்க்குமென நம்பப்படுகின்றது.கூடிய விரைவில் டெப்லட்களுக்கும் இன்டெல் புரசசர்கள் உபயோகிக்கப்படவுள்ளன.தற்போது வெளியாகும் ஸ்மார்ட் போன்கள் பல எ.ஆர்.எம் புரசசர்களையே கொண்டுள்ளன. இதற்குத் தகுந்த போட்டியளிக்கும் வகையிலேயே இன்டெல் புரசசர்களை தயாரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF