Tuesday, January 10, 2012

போர்ப்படை வீரரைப் போலக் காட்சியளிக்கும் எறும்புகள்!

சுறுசுறுப்புக்கு உதாரணமாக எறும்பைச் சொல்வார்கள். அதற்கு காரணம், மழைக்காலத்திற்கு தேவையான உணவை கோடை காலத்திலேயே அது சேகரித்து, சேமித்து வைத்துக் கொள்ளும்.எறும்புகளில் பலவகைகள் உண்டு. அதில் ஒரு வகை, வேலைக்கார எறும்புகள். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு வகையான எறும்பின் மரபணுவில் இருந்து புதிய வகையான சூப்பர் சோல்ஜர் என்று கருதக்கூடிய சிறந்த படைவீரர் எறும்புகளை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.



சாதாரண எறும்புகளின் லார்வாபுழுக்களிலும் இத்தகைய சிறப்புத்திறன் வாய்ந்த மரபணுப் பண்புகள் உள்ளன. இவற்றைக் கொண்டு இத்தகைய சூப்பர் சோல்ஜர் எறும்புகளை உருவாக்க முடியும்.இது பெரிய தலை, பெரிய உடல் ஆகியவற்றைக் கொண்டு இருப்பதால், பார்ப்பதற்கு ஒரு போர்ப்படை வீரரைப் போலவே காட்சி அளிக்கும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.இந்த கண்டுபிடிப்பு மனித மரபியலில் புதிய முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF