ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு பல்வேறு விதமான ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்லெட் கணணிகள் அறிமுகமாகி மக்களை வெகுவாக கவர்ந்தது.தற்போது இந்த இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வீட்டு உபயோக சாதனப் பொருட்களை அறிமுகப்படுத்த பல்வேறு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.
இதுகுறித்து கூகுள் நிறுவன செயற்குழு தலைவர் எரிக் ஷ்மிட் கூறுகையில், கூகுள் நிறுவனம் உருவாக்கியுள்ள ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்த ஏதுவாக ஓபன் சோர்சில் விடப்பட்டுள்ளது.இதன் முதற்கட்டமாக சில நிறுவனங்கள் குளிர்சாதனப்பெட்டிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. இதற்கான பணிகள் நிறைவடைந்து விட்டது, விரைவில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார்.