Thursday, January 26, 2012

விண்டோஸ் 7ல் மறைந்துள்ள Themes, Wallpapers ஐ பயன்படுத்து​வதற்கு!


இன்று அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்படும் இயங்குதளமாக விண்டோஸ் 7 காணப்படுகின்றது. இவ் இயங்குதளத்தில் நாம் அறியாத பல அம்சங்கள் மறைந்து காணப்படுகின்றன.அதேபோல் கணணியின் பின்னணி, அமைப்பை மாற்றுவதற்கு பயன்படும் Themes, Wallpapers போன்றன காணப்படுகின்றன. இருந்தும் குறிப்பிட்ட அளவு வசதியே வெளிப்படையாக இருக்கின்றது. ஆனால் சில நாடுகளை பிரதிநித்துவப்படுத்தும் மேலதிக Themes, Wallpapers என்பன காணப்படுகின்றன. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.
1. Start menuற்கு சென்று அங்கு காணப்படும் search எனும் பகுதிக்கு சென்று C:WindowsGlobalizationMCT என தட்டச்சு செய்து Enter keyயை அழுத்தவும்.


2. தோன்றும் சாளரத்தில் MCT-AU, MCT-CA, MCT-GB, MCT-US, MCT-ZA  ஆகிய பெயர்களில் Folder காணப்படும். அதில் விதவிதமான Themes, Wallpapers காணப்படும். அவற்றை பயன்படுத்தி உங்கள் கணணியின் பின்னணி, அமைப்பை ஆகியவற்றை மாற்ற முடியும்.
அதாவது,
MCT-AU - அவுஸ்திரேலியா சம்மந்தமான Themes, Wallpapersகளை கொண்டுள்ளது.
MCT-CA - கனடா சம்மந்தமான Themes, Wallpapersகளை கொண்டுள்ளது.
MCT-GB - பிரித்தானியா சம்மந்தமான Themes, Wallpapersகளை கொண்டுள்ளது.
MCT-US - ஐக்கிய அமெரிக்கா சம்மந்தமான Themes, Wallpapersகளை கொண்டுள்ளது.
MCT-ZA - தென்னாபிரிக்கா சம்மந்தமான Themes, Wallpapersகளை கொண்டுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF