Tuesday, January 10, 2012

காதுகளை பாதுகாக்கும் ஹெட்போன்கள்!


இன்றைய இளைய தலைமுறையினர் எப்பொழுதும் ஹெட் போன்களுடன் தான் வலம் வருகின்றனர். இதனால் என்ன பாதிப்பு என்பதை அவர்கள் உணர்வதே இல்லை.சாதாரணமாக ஹெட்போன்களில் இருந்து வரும் சத்தமானது, நேரடியாக செவிப்பறையை அடைகிறது. அதனால் தான் நமக்கு ஸ்டீரியோ, நுட்பமான இசை என்று துல்லியமாக கேட்க முடிகிறது.
இதனால் நேரடியாக காதின் உட்புறமானது பாதிக்கப்படுகிறது என்பதை நாம் உணர்வதேயில்லை. நாளடைவில் இதனால் பாதிப்பு ஏற்படலாம். இதைத் தவிர்க்கும் வகையில் தற்போது புதிய ரக ஹெட் போன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.இதன் மூலம் காது நேரடியாக பாதிக்கப்படுவதில்லை. இதில் இருந்து வரும் சத்தமானது நேரடியாக செவிப்பறை எலும்புகளை அடைந்து, அதில் இருந்து உட்புறமான காதிற்கு கடத்தப்படுகிறது. இந்த வகையில் தயாரிக்கப்பட்ட ஹெட்போன்களை அணிவதும் சுலபம் தான். இதை அணிந்து கொண்டு ஆடலாம், ஒடலாம், நடக்கலாம்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF