Monday, January 23, 2012

நன்றி தெரிவித்த விக்கிபீடியாவும் அதிகமானோரை கவர்ந்த இணைய போராட்டமும்!


அமெரிக்க அரசு கொண்டுவர முனையும் இணைய திருட்டு தடுப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவிக்கிபீடியா, கூகுள் உட்பட உலகின் முன்னணி தகவல் இணையத்தளங்கள் நடத்திய ஒரு நாள் சேவை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. குறித்த இணையத்தளங்கள் மீண்டும் வழமையான சேவையை வழங்க தொடங்கியுள்ளன.இணைய பாவணையாளர்களிடையே விழிப்புணர்வு மேற்கொள்ளும் முகமாக விக்கிபீடீயாவின் ஆங்கில பிரிவு மேற்கொண்ட திடீர் வேலைநிறுத்தம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அமெரிக்காவின் மிக பிரபலமான இணையத்தளங்களில் 10 வது இடத்திலிருக்கும் விக்கிபீடியா நேற்றைய சேவைநிறுத்த போராட்டத்தின்பின்னர் இன்று தனது முகப்பு பக்கத்தில் விக்கிபீடியாவின் பாதுகாப்புக்காக ஒத்துழைத்தமைக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளது.


'எனினும் நாம் இன்னமும் அதை செய்துமுடிக்கவில்லை' எனவும் கூறியுள்ளது. அமெரிக்காவில் கூகுள் ஹோம்பேஜில் கறுப்பு கட்டத்துடன் தோன்றய லோகோவும் பலரின் கவனத்தை பெற்றிருந்தது. குறித்த லோகோவின் ஊடாக, 4.5 மில்லியன் பேர் அமெரிக்க காங்கிரஸுக்கு எதிரான ஆன்லைன் பெட்டிஷனில் கையெழுத்திட்டுள்ளனர்.நேற்றைய தினத்தில் இச்சட்டத்தை எதிர்த்து 2.4 மில்லியன் குறுஞ்செய்திகள் டுவிட்டர் ஊடாக பதியப்பட்டுள்ளது.விக்கிபீடியாவின் ஆங்கில பிரிவின் முகப்பு பக்கத்தின் ஊடாக இச்சட்டத்திற்கு எதிரான விழிப்புணர்வு பதிவை 4 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ, லாஸ்வேகாஸ், நியூயோர்க் நகரங்களில் இச்சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்ட பேரணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர் பேர்க் நேற்று புதன்கிழமை மாலை, விடுத்த அறிவிப்பில், இணையம் சார்ந்த சார்புக்கொள்கை உடைய அரசியல் தலைவர்களே தற்போது இந்த உலகத்துக்கு தேவை. இவ்வாறான தலைவர்களுடன் நாம் பல மாதங்களாக பேசிவருகிறோம். இதற்கான மாற்று வழிகளை தேடி வருகிறோம் எனதெரிவித்திருந்தார்.அவருடைய சொந்த பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிந்திருந்த இப்பதிவை 50,000 ற்கு மேற்பட்டோர் லைக் செய்திருந்தனர்.


அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் SOPA சட்டத்தை எதிர்த்து சிவிக் மையத்தின் முன்னிலையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்.கடந்த வருடம், நவம்பர் மாதம் அமெரிக்க செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபையில் முன்மொழியப்பட்ட இணைய திருட்டு தடுப்பு சட்ட வரைபானது (Stop Online Piracy Act, SOPA) மேலும் பல கலந்துரையாடல்களின் பின்னர் எதிர்வரும் வாரமளவில் சட்டபூர்வமாக அமலாக்கப்பட சந்தர்ப்பம் அதிகரித்துள்ளது. இது இணைய தணிக்கை முறை, இணையத்தை முடக்குவதாகவும், சுதந்திர பேச்சு மற்றும் குற்றவியல் முன்னறிவிப்பாளர்களுக்கு பயமுறுத்துவதாகவும் இருப்பதாக இச்சட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.

உதாரணத்திற்கு சிறிய வசதிகளுடன் இயங்கும், வெளிநாட்டு இணைய தளங்கள், வேறொரு பிரபலமான இணைய தளத்திலிருந்து ஒரு தகவலை அதன் அனுமதியின்றி பிரதி செய்து பிரசுரிக்குமாயின் அல்லது ஆட்சேபணைக்குரிய கருத்து பகிர்வொன்றை பிரசுரிக்குமாயின் குறித்த சிறிய இணையத்தளம் மீது வழக்கு தாக்கல்செய்யலாம். கூகுள், பேஸ்புக், யாஹூ போன்ற தேடுபொறிகளில் குறித்த பதிவு பற்றிய சொற்களையே தேட முடியாத படி முடக்கலாம். அமெரிக்க வர்த்தக சந்தையை பாதுகாப்பதற்காகவே இச்சட்டம் என வெளிப்படையாக சொல்லப்பட்டாலும், உண்மையில் இணைய உலகின் இலவச தகவல் பகிர்வு சேவையை முடக்குவதற்கே அமெரிக்கா இச்சட்டம் மூலம் முயற்சிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF