
மனித உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் போது மாற்று உறுப்புகளை பொருத்தும் அறுவை சிகிச்சை உலகின் பல்வேறு நாடுகளின் நடைபெற்று வருகிறது. இதில் துருக்கி நாட்டு மருத்துவர்கள் புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள்.அதாவது உறுப்பு தானம் தந்த ஒருவரின் 2 கைகள், ஒரு கால் பகுதியை எடுத்து, 34 வயது ஆணுக்கு உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி சாதனை புரிந்துள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சை அந்நாட்டு கடலோரப்பகுதியில் அமைந்துள்ள அந்தால்யா நகரில் உள்ள மருத்துவமனையில் நடந்தது. இத்தகைய அறுவை சிகிச்சை உலகில் முதல் முறையாக நடந்திருப்பதாக அறிவித்துள்ளனர். இது மட்டும் இன்றி தானம் கொடுத்த நபரின் முகப்பகுதியை எடுத்து மற்றொரு வாலிபருக்கும் பொருத்தி இருக்கிறார்கள்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF