Wednesday, January 18, 2012

ஈரானிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கப்படும் : இந்தியா!


ஈரானிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கப்படும் என இந்திய வெளியுறவு செயலர் ரஞ்சன் மாதாய் தெரிவித்துள்ளார். ஐ.நாவினால்மேற்கொள்ளப்படும் பொருளாதார தடைகளை மாத்திரமே ஏற்றுக்கொள்வோம். ஏனைய நாடுகளின் தடைகள் தனிப்பட்ட வகையில் எம்மில் செலுத்த முடியாது என நிருபர்களிடம் அவர் தெரிவித்தார்.


ஈரான் மீதான அமெரிக்க பொருளாதார தடை பற்றி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், அமெரிக்க பொருளாதார தடைகளிலிருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது ஈரானின் மத்திய வங்கியுடன் தொடர்ந்து உறவுகளை பேணுவதற்கு அனுமதி வழங்குகிறது என்றார். மேலும் ஈரானுக்கு பிரதிநிதிகள் குழுவொன்று சென்று ஆராய்ந்துள்ளதாகவும், விரைவில் கிடைக்கவுள்ள அவர்களின் அறிக்கையின் படி, ஆராயப்பட்டு அடுத்தகட்ட நடவைக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். தற்போது கிரீஸ் போன்ற மேலும் பல ஐரோப்பிய நாடுகள் ஈரானுடன் தொடர்ந்து மேற்கொண்டுள்ள தொடர்பு போன்று தாமும் அந்நாட்டுடன் தொடர்பை கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF