
வெயிலில் அதிக நேரம் விளையாடும் குழந்தைகளுக்கு மனச்சோர்வு ஏற்படாது என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இதற்கு காரணம் வெயிலில் குழந்தைகள் அதிக நேரம் இருந்தால் சூரிய ஒளி உடலில் பட்டு உடலுக்குத் தேவைப்படும் வைட்டமின் டியை ஈர்க்கும். இதனால் உடலும் மனமும் ஆரோக்கியப்படும்.வைட்டமின் டியால் தோலுக்கு நல்லது என்று மட்டும் தான் இதுவரை கூறிவந்தார்கள். இப்போதுதான் அது மனச் சோர்வையும் தளர்ச்சியையும்கூட போக்கும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
9 வயது முதல் 13 வயது வரையிலான 2,700 சிறார்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் இந்த முடிவு தெரியவந்துள்ளது. அவர்களுடைய உடலில் வைட்டமின் டி எந்த அளவு இருக்கிறது, அவர்கள் அன்றாடம் எத்தனை மணி நேரம் வெயிலில் இருந்தார்கள் என்று கணக்கிட்டு ஒப்பு நோக்கினார்கள்.அதிக நேரம் வெயிலில் இருந்து விளையாடிய, வேலை செய்த சிறுவர்களுக்கு அந்த அளவு அதிகம் இருந்தது. அதே போல மனச் சோர்வால் பாதிக்கப்பட்டு சுறுசுறுப்பில்லாமல் எதையோ பறிகொடுத்தார் போல இருந்த குழந்தைகளைப் பரிசோதித்தபோது வைட்டமின் டி அளவு குறைவாக இருந்தது தெரிந்தது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF