Tuesday, January 17, 2012

புதிய வடிவத்துடன் வரவிருக்கும் விண்டோஸ் 8!


வரவிருக்கும் பெப்ரவரி மாதத்தில் வின்டோஸ் 8 இயங்கு தளத்தின் பரீட்சாத்த பதிப்பு (Beta Version) வெளியாகவுள்ளது. அதனோடு இனைந்து வரவிருக்கும் புதிய நன்பர்தான் வின்டோஸ் ஸ்டோர் (Windows Store) ஆகும்.
இவை வின்டோஸ் 8 OS மூலம் பல்வெறு வேளைகளுக்கான அப்லிகேஷன் (Application) எனும் Apps களை Download செய்வதற்கான உத்தியோகபூர்வ இனையத்தளம் ஆகும்.இது Apple App Store மற்றும் Google Android Market என்பன போன்ற ஒரு தளமாகும். இருந்தாளும் இதில் ஒரு வித்தியாசம் உள்ளது, அதாவது கணணி இயங்குதளம் (Operating System) ஒன்றுக்காக இவ்வாரான App Store ஒன்று அறிமுகமாவது இதுவே முதல் தடவையாகும்.இன்றைய உலகில் உள்ள 10 கணணிகளில் 9 இல் இருப்பது ஏதாவது ஒரு Windows இயங்குதளம் ஆகும். அவற்றில் அனேகமானவை CD அல்லது DVD களில் விற்பனையானவையாகும். அல்லாமல் தேவைக்கு ஏற்ப பகுதிகளாக Download செய்யப்பட்டவை அல்ல.


CD , DVD களில் மென்பொருற்களை விற்பனை செய்யும் கலாச்சாரத்தை ஓரம் கட்டிவிட்டு அவற்றை நேரடியாக கணனிக்கு தரவிரக்கும் (Download) முறை இந்த Windows 8 உடன் உலகுக்கு அறிமுகமாகிறது. எட்டு கோடிக்கு அதிகமான Windows பாவனையாளர்களை ஒரே இனையத்தளத்தில் கொண்டு சேர்க்கும் மாபெரும் வாய்ப்பு இதன் மூலம் Microsoft இற்கு கிட்டியுள்ளது.கடந்த டிசம்பர் 6ஆந் திகதி Microsoft நிறுவனம் Windows Store இன் தொழிற்பாடுகள், அமைப்பு பற்றிய தகவல்களை வெளியிட்டது. Windows 8 இற்கு Application எழுதுவதற்கு ஏனைய Program எழுதுவதைப் போன்ற அறிவு தேவை இல்லை, அவ்வாரான Apps தயாரிக்க விரும்புவோருக்கு தேவையான விஷேட Tools, டெம்ப்லட் என்பன Microsoft நிறுவனம் மூலம் கிடைக்கின்றன. ஜாவா (Java), சீஷாம்(C#), விஷுவல் பேசிக் (Visual Basic) போன்ற சாதாரன முறைகளில், நிரலாக்க மொழிகள் மூலம் Windows 8 இற்கு Application எழுத முடியும்.


பெப்ரவரி மாதத்தில் வின்டோஸ் 8 இயங்கு தளத்தின் பரீட்சாத்த பதிப்பு (Beta Version) வெளியாவதோடு வெளியிடப்படவுள்ள Windows Store க்கான அனேகமான Apps ஏற்கனவே தயாராகிவிட்டன. இவை அனைத்தும் மைக்ரோசொப்டின் குழுவினரால தயாரிக்கப்பட்டுள்ளன. வின்டோஸ் 8 இயங்கு தளத்தின் பரீட்சாத்த பதிப்பு (Beta Version) தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கே வழங்கப்படவுள்ளதோடு அவர்களுகு Windows Store மூலம் Apps களை தரவிரக்கி பயன்படுத முடியும். இதன் மூலம் குறைகள் கண்டரியப்பட்டு திருத்தப் படும். Windows Store இல் வெளியிடப்படவுள்ள Apps களின் சில மாதிரிகள் கடந்த டிசம்பர் 6 அன்று நடந்த நிகழ்வின் போது காட்சிப்படுத்தப் பட்டன.இவ்வாறான Apps களின் Trail பதிப்புகள் வின்டோஸ் 8 உடன் இலவசமாக வழங்கப்படும். அவற்றில் திருப்தி கண்டால் முழுப் பதிப்பையும் கொள்வனவு செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF