Tuesday, January 24, 2012

விண்டோஸ் 7-ல் தற்போதைய கடவுச்சொல்லை தவிர்த்து புதிய கடவுச்சொல்லை கொடுப்பதற்கு!


கணிணியிலுள்ள தரவுகளின் பாதுகாப்பிற்காக கொடுக்கப்பட்டிருக்கும் இரகசிய கடவுச்சொல்லை அடிக்கடி மாற்றம் செய்யவேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஏற்கனவே உள்ள கடவுச்சொல்லை மறக்க வாய்ப்புக்கள் உள்ளது. அதேபோல் இச்செயற்பாட்டிற்காக புதிய முறைகளை பயன்படுத்த முயற்சிப்பவர்களும் இருக்கின்றனர்.அவர்கள் வழமையான முறையை தவிர்த்து வேறு மூன்று முறைகளில் கடவுச்சொல்லை மாற்ற முடியும். அதாவது விண்டோஸ் 7 DVD -ஐ பயன்படுத்துதல், OfflineNT கடவுச்சொல் முறையை பயன்படுத்துதல், Registry Editor-ஐ பயன்படுத்துதல் ஆகும்.


இப்பொழுது Registry Editor-ஐ பயன்படுத்தி எவ்வாறு கடவுச்சொல்லை மாற்றுவது என்று பார்ப்போம். 


1. Control Panel க்கு சென்று Administrative Tools என்பதை தெரிவுசெய்க.


2.Computer Management என்பதை தெரிவு செய்க


3.System Tools-ஐ தெரிவு செய்க


4. Local Users and Groups என்பதை Double Click செய்து User-ஐ தெரிவு செய்க


5.இதில் Login செய்வதற்கான கணக்குகள் காணப்படும் அதில் கடவுச்சொல்லை மாற்றவேண்டிய கணக்கில் Right Click செய்து Set Password என்பதை Click செய்க


6.அப்பொழுது எச்சரிக்கை தகவல் ஒன்று தோன்றும் அதில் Proceed என்பதை தெரிவு செய்க


7.தொடர்ந்து சாளரம்(Window)ஒன்று தோன்றும் அதில் உங்களது புதிய கடவுச்சொல்லை உட்செலுத்தி ok என்பதை அழுத்துக.இப்பொழுது உங்களது கடவுச்சொல் புதிப்பிக்கப்ட்டுவிடும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF