
நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின்போது புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர இதற்கான திட்டத்தை முன்வைத்தார், அத்துடன் மாகர சிறைச்சாலையிலும் வற்றரேக முகாமிலம் இருமாடிகளை கொண்ட கட்டிடங்களை அமைத்து வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களை இடம்மாற்றவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக 96 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
கொழும்பின் அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி என்பவற்றை கருத்திற்கொண்டு இங்குள்ள நிலத்தை பயன்படுத்தும் நோக்கில் தற்போதைய இடத்திலிருந்து வெலிக்கடை சிறைச்சாலையை நீக்குவதற்கான ஒப்புதலை அமைச்சரவை ஏற்கணவே வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உயர்தர பரீட்சை முடிவுகளில் ஏற்பட்ட தவறுகளை ஆய்வு செய்ய குழு.

இக்குழுவிற்கு தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுகளின் செயலாளர் திருமதி தாரா விஜேதிலக தலைமை தாங்குகின்றார்.
காவல்துறையின் சில அதிகாரப்பிரிவுகளை மாத்திரம் பகிர்ந்துக்கொள்ள தயார் - அரசாங்கம்.

காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கு பிரச்சினைகள் உள்ளன எனினும் அது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக அண்மையில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தமையை அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல சுட்டிக்காட்டியுள்ளார்.தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை கோருகிறது. இந்தநிலையில் இடையில் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகிச்செல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியத்தல்ல. திம்பு பேச்சுவார்த்தை முதல் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்கின்றன
எனினும் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து முன்னெடுக்க தயார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் சம்பந்தன் கூறியிருப்பது மகிழ்ச்சிக்குரியது என்று கேஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.இதேவேளை காவல்துறை அதிகாரங்களில் சில பிரிவுகளில் மாத்திரம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைய பகிர்வுகளை மேற்கொள்ளமுடியும் என்றும் ரம்புக்வெல கூறினார்
தலிபான்களை அவமானப்படுத்திய அமெரிக்கா: வீடியோ வெளியானதால் பரபரப்பு.

அந்த கடிதத்தில் போர் விதிமுறைகளை மீறும் வகையில் அமெரிக்க வீரர்கள் செயல்பட்டிருப்பது அநாகரிகமாக, கண்டிக்கத்தக்க வகையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுபற்றி பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி மற்றும் கடற்படை செய்தி தொடர்பாளர் ஸ்டீவர்ட் அப்டன் கூறியதாவது: காட்சியை யார் வீடியோ எடுத்தது, யார் இணையத்தளத்தில் வெளியிட்டது என்பது தெரியவில்லை.
போர் விதிமுறைகளில் மிகவும் கண்ணியம், நேர்மையை பின்பற்றும் நாடு அமெரிக்கா. அதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இணையத்தளத்தில் வெளியான காட்சி உண்மையாக இருக்கும் பட்சத்தில் பாரபட்சமின்றி அமெரிக்க வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.வீடியோ காட்சி மற்றும் அதில் ஈடுபட்டதாக கூறப்படும் அமெரிக்க வீரர்கள் தொடர்பாக அமெரிக்க கடற்படையின் குற்றவியல் புலனாய்வு பிரிவு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
வடகொரிய முன்னாள் ஜனாதிபதியின் உடலை பாதுகாக்க முடிவு.

அவரது பிறந்தநாளான பிப்ரவரி 16ம் திகதியை “மின்னும் விண்மீனின் நன்னாள்” என்று குறிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏனெனில் இவர் காலத்தில் வடகொரியாவில் உருவான ஏவுகணைகளுக்கு மின்னும் விண்மீன் என்று பெயரிடப்பட்டது.இவரது கட்சி இவர் மீது கொண்டிருக்கும் பெரு மதிப்பின் காரணமாகவும், தீராத ஆசையினாலும் இவரை இக்கட்சியின் உன்னதத்தலைவராகப் போற்ற வேண்டும் என்பதாலும் இவர் உடலைப் பாதுகாக்க முடிவு எடுக்கப்பட்டது.
இவரது தந்தை கிம் II சுங் வாழ்ந்து வந்த அரண்மனையை இப்போது அருங்காட்சியகமாக மாற்றி அவரது பொன்னுடலைப் பாதுகாக்கின்றனர். இதனால் அவர் வடகொரியாவின் அழியாத ஜனாதிபதியாகப் போற்றப்படுகிறார். தந்தையைப் பாதுகாப்பது போலவே இவரது மகன் கிம் ஜோங் இல் உடலையும் பாதுகாக்க விரும்புகின்றனர்.


ஜேர்மன் ஜனாதிபதிக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு.

Transparency International என்ற ஊழலுக்கு எதிரான அமைப்பு உல்ஃபின் புத்தாண்டு செய்தியைப் புறக்கணிப்பதாகக் கூறியுள்ளது. பத்து மில்லியன் மக்களுக்கு தெளிவு ஏற்படுத்த வேண்டும் என்று இந்த அமைப்பின் தலைவியான எடா மூல்லெர் தெரிவித்தார்.பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் உல்ஃபை அவருடைய பணிகளுக்காக மதிப்பதாகக் கூறினார். ஜனாதிபதி தன் மனைவியுடன் நண்பர் ஒருவரின் விடுதியைத் தங்க பயன்படுத்தியது சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது.
ஆனால் உல்ஃப் இதனை மறுத்தார், தன் நண்பர்களுடன் இருந்ததாகக் கூறினார். ஆனால் இதனை அங்கிருந்த பணியாளர்கள் மறுத்தனர். நண்பர் ஒருவர் சிறிதுநேரம் மட்டுமே இருந்தார் என்றும் மற்ற நேரங்களில் உல்ஃப் தம்பதியினரே அங்கு பொழுதுபோக்கினர் என்று உறுதியாகத் தெரிவித்தனர்.
இவரைப் பற்றிய புத்தகம் வெளியிட இவர் நண்பரான டேவிட்குரேனே ஓல்டு 10,000 யூரோ வழங்கியதும் சர்ச்சைக்குள்ளானது. ஆனால் டேவிட் இந்தப் பணத்திற்கும் புத்தக வெளியீட்டுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்றார்.உல்ஃப் பதவி விலகும்பட்சத்தில் அடுத்த ஜனாதிபதி போட்டியில் வலதுசாரி ஆதரவுடைய ஜோவாக்கிம் காக் என்பவருக்கு வாய்ப்பு இருப்பதாகக் கருதுகின்றனர்.Stern என்ற பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் காக்குக்கு 32 சதவீதம் ஆதரவு காணப்படுவது தெரியவந்தது.
கனடாவின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றும் மேற்குப் பகுதி நகரங்கள்..

சஸ்கட்டூன், கேல்கரி, எட்மண்ட்டன் மற்றும் ரெஜினா ஆகிய நகரங்கள் விரைவில் முன்னேறி வருகின்றன. வான்கூவரும் இந்த வரிசையில் இடம்பெறுவது உறுதி. ஐந்தாம் இடத்துக்கு ரெஜினாவும், டொரொண்ட்டோவும் போட்டியிடலாம்.இயற்கை வளம், புலம்பெயர்ந்தோரைக் கவரும் திறம், வீட்டு வசதி, நுகர்வோர் செலவிடும் வாய்ப்பு எனப் பலவகைகளிலும் இந்த நகரங்கள் நன்மை பெறுகின்றன. 40,000 பேருக்கு புதிதாக வேலை கிடைத்துள்ளது.
கனடாவின் மையப்பகுதியில் உள்ள நகரங்களில் பொருளாதாரம் வளர்ச்சி நிலையில் இருக்காது.இந்த 2012ம் ஆண்டு முதல் பத்து நகரங்களின் எதிர்பார்க்கும் வளர்ச்சி விகிதம் வருமாறு:
சஸ்கட்டூன்: 4.0 சதவீதம்.
கேல்கரி: 3.6 சதவீதம்.
எட்மண்ட்டன்: 3.4 சதவீதம்.
ரெஜினா: 2.9 சதவீதம்.
ஒஷாவா, ஒண்டேரியோ: 2.7 சதவீதம்.
டொரொண்டோ, டிராய்ஸ், ரிவேரெஸ், வான்கூவர்: 2.6 சதவீதம்.
கிட்ச்னெர், கேம்பிரிட்ஜ், வாட்டர்லூ, விண்ட்சார்: 2.5 சதவீதம்.
கேல்கரி: 3.6 சதவீதம்.
எட்மண்ட்டன்: 3.4 சதவீதம்.
ரெஜினா: 2.9 சதவீதம்.
ஒஷாவா, ஒண்டேரியோ: 2.7 சதவீதம்.
டொரொண்டோ, டிராய்ஸ், ரிவேரெஸ், வான்கூவர்: 2.6 சதவீதம்.
கிட்ச்னெர், கேம்பிரிட்ஜ், வாட்டர்லூ, விண்ட்சார்: 2.5 சதவீதம்.
ரஷிய விண்கல தோல்விக்கு வெளிநாடுகள் சதி: விஞ்ஞானி குற்றச்சாட்டு.

அதுபோல கடந்த நவம்பர் மாதத்தில் போபாஸ் கிரண்ட் திட்டமும் தோல்வியடைந்தது. இதனால் ரஷியாவுக்கு ரூ. 600 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது.இதன் பின்னணியில் வெளிநாடுகள் சதி இருப்பதாக ரஷிய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் விளாடிமிர் போபோவ்கின் தெரிவித்துள்ளார்.
ரஷிய ரோடார்களின் பார்வையில் இருந்து விண்கலம் கடந்து சென்றதும் அவற்றின் மீது ஏதோ ஒரு அன்னிய சக்தி செயல்படுகிறது. எனவே தான் பூமி எல்லையை தாண்டியதும் விண்கலம் செயலிழக்கிறது. எனினும் யாரையும் குறிப்பிட்டு குறை கூற விரும்பவில்லை என அவர் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியச் சட்டங்களால் நோயாளிகள் அவதி.

இத்தகவலை ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸின் தலைவான பேரா. நார்மன் வில்லியம்சும், ராயல் காலேஜ் ஆஃப் ஃபிஸிஷியன்ஸின் தலைவரான சர் ரிச்சர்டு தாம்சனும் கூறினர்.மேலும் அவர்கள் தெரிவிக்கையில், ஒரே பணித்தகுதியுடைய வைத்தியர்களிடையே திறமை வேறுபடுகிறது, பல்வேறு நாடுகளிலிருந்து பிரிட்டன் வரும் வைத்தியர்களின் சேவை தகுதியை நிர்ணயிக்க சில வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று இவர்கள் கருதுகின்றனர்.
ஆங்கில மொழியில் நல்ல பயிற்சியும், தேர்ச்சியும் பெறாதவர்களை பிரிட்டனுக்குள் அனுமதிக்கத் தாம் தடை விதித்திருப்பதாக சுகாதாரத் துறையின் ஆண்டுரூ லேன்ஸ்லி கூறினார்.இதற்காக கடந்தாண்டு புதிய விதிகளை அறிமுகம் செய்திருப்பதாகவும் தெரிவித்தார். வைத்தியர்கள் ஆங்கில மொழியில் நன்றாக பேசுகின்றனரா என்பதை அறிய புதிய விதிகளும் புதிய அதிகாரமும் நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: குடியரசுக் கட்சி சார்பில் மிட் ரோம்னியே முன்னிலை.

எனவே இக்கட்சி சார்பில் மயாசுசெட்ஸ் மாகாண முன்னாள் கவர்னர் மிட் ரோம்னி உட்பட 12க்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர். அவர்களில் மிட் ரோம்னிக்கே முன்னிலையில் உள்ளார்.நியூ ஹாம்சையர் மாகாணத்தில் நடந்த வாக்கெடுப்பில் 8 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் இவர் வெற்றி பெற்றார். பதிவான மொத்த வாக்குகளில் ரோம்னிக்கு ஆதரவாக 36 சதவிகிதமும், ரோன்பால் என்பவருக்கு ஆதரவாக 23 சதவிகிதமும் வாக்குகள் விழுந்திருந்தன.
சீனாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் ஜான் ஹண்ட்ஸ்மேன் என்பவருக்கு 18 சதவிகிதம் வாக்குகள் கிடைத்தன. பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் நீட் சிங்ரிச்சுக்கு 4வது இடமே கிடைத்தது.ஏற்கனவே வோறொரு மாகாணத்தில் நடந்த வாக்கெடுப்பிலும் மிட் ரோம்னியே வெற்றி பெற்றார். பரவலாக இருவருக்கு ஆதரவான நிலை காணப்படுவதால் ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிடும் ஒபாமாவை எதிர்த்து நிற்கும் வாய்ப்பு ரோம்னிக்கே அதிகமாக உள்ளது.
பாகிஸ்தானில் அரசுக்கும், இராணுவத்திற்கும் இடையே அதிகரித்து வரும் மோதல்.

பிரதமர் யூசுப் ரசா கிலானி தலைமையிலான அரசு பொறுப்பேற்று நான்காவது ஆண்டிலேயே இராணுவத்திடம் இருந்து பல நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது.இதற்கு அந்நாட்டின் பாதுகாப்புத் துறை செயலாளர் கலீம் அலி லோதியை பதவி நீக்கம் செய்து பிரதமர் உத்தரவிட்டதும் ஒரு காரணமாகும்.
பாகிஸ்தான் இராணுவ தளபதி கயானிக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் கலீம் அலி லோதி, இராணுவமும், ஐஎஸ்ஐயும் அரசின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதல்ல என்று உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்திருந்தார்.
இவரது நீக்கத்திற்குப் பதிலடியாக முந்தைய இராணுவப் புரட்சியின் போது முக்கியப் பங்கு வகித்த சர்ஃபராஸ் அலியை இராணுவ தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டியில் பணிமாற்றம் செய்துள்ளது.இதனால் அரசுக்கும், இராணுவத்திற்கும் இடையே அதிகரித்து வரும் இந்த மோதல் போக்கு பாகிஸ்தான் மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
சிரியாவில் பிரான்ஸ் பத்திரிக்கையாளர் படுகொலை.

மேலும் சிரியாவில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக ஐ.நா சபையும் குற்றஞ்சாட்டி வருகிறது. மக்களின் எண்ணத்தை படம் பிடிப்பதற்காக பிரான்ஸ் நாட்டை சேர்நத பத்திரிகையாளர் கில்லஸ் ஜேக்குயர் என்பவர் சிரியா பொதுமக்களை சந்தித்து கருத்துக்களை கேட்டறியும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் கில்லஸ் ஜேக்குயர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சிரியா அரசு தெரிவித்தது. சிரியாவின் உள்நாட்டு கலவரத்தில் வெளிநாட்டு பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்படுவது இதுவே முதல் முறையாகும்.ஜேக்குயர் மறைவு குறித்து கருத்து தெரிவித்த பிரான்ஸ் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலைன் ஜூப்பே, இச்சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு செயலர் பதவி நீக்கம்: பிரதமர் அதிரடி.

இந்நிலையில் பாகிஸ்தான் இராணுவம் கிலானியின் குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது என்றும், இது மிகவும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.இதற்கிடையே பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை செயலாளர் காலித் நயீமை பதவி நீக்கம் செய்து பிரதமர் யூசுப் ராசா கிலானி உத்தரவிட்டுள்ளார்.
சிரியாவில் ஒரு நாளைக்கு 40 பேர் வீதம் 400 பேர் பலி.

இந்நிலையில் சிரியாவில் நடைபெறும் நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக 165 அரபு லீக் பிரதிநிதிகள் அடங்கிய குழு சிரியா சென்றது. இக்குழு நேரில் பார்வையிடத் தொடங்கிய நாள் முதலாக இதுவரை 400 பேர் அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு 40 பேர் வீதம் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.இதிலிருந்து சிரியா தனது அடக்குமுறையைக் கைவிடவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.
நியூயார்க்கில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் நேற்று நடந்த 15 நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய அமெரிக்க தூதர் சூசன் ரைஸ் கூறுகையில், அரபு லீக் வந்த பிறகு இதுவரை 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 40 பேர் வீதம் பலியாகியுள்ளனர்.அரபு லீக் பரிந்துரைத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம் வன்முறைக்கு முடிவு கட்டுவதற்குப் பதிலாக, மேலும் மேலும் வன்முறையில் சிரியா ஈடுபட்டு வருகிறது எனத் தெரிவித்தார். இதற்கிடையில் சிரியா நிலவரம் குறித்து அரபு லீக் தனது அறிக்கையை இம்மாதம் 19ம் திகதி தாக்கல் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



வேலையில்லா திண்டாட்டம்: அண்டார்டிகாவுக்கு படையெடுக்கும் இளைஞர்கள்.

கடந்தாண்டில் பிரிட்டனில் நடைபெற்ற கலவரத்திற்கு வேலையின்மையும் ஒரு முக்கிய காரணம் என அரசின் அறிக்கை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அண்டார்டிகாவில் நடந்து வரும் பல்வேறு பணிகளுக்காக பிரிட்டிஷ் அன்டார்டிக் சர்வே என்ற அரசு சார் நிறுவனம் வேலைக்கு ஆள் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
சமீபத்தில் பிளம்பர், எலக்ட்ரீஷியன், சமையல் நிபுணர்கள், மர வேலை பார்ப்போர் என மொத்தம் 36 பணியிடங்களுக்கு விளம்பரம் அளித்திருந்தது.
இந்த வேலைகளுக்கு அடிப்படை சம்பளம் 23 ஆயிரத்து 700 பவுண்டு வழங்கப்படும். அத்துடன் உணவு, தங்குமிடமும் இலவசமாக தரப்படும். இந்த 36 பணியிடங்களுக்காக பிரிட்டன் முழுவதிலும் இருந்து 3,000 பேர் விண்ணப்பத்திருந்தனர்.
பிரிட்டனில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தம், அதன் விளைவான வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை தான் இவ்வளவு விண்ணப்பங்கள் வரக் காரணம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.