Sunday, January 29, 2012

ஒசாமா பாகிஸ்தானில் பதுங்கியிருந்ததை கண்டுபிடித்தது எப்படி?!


ஒசாமா பின் லாடனை பிடிப்பதற்கு, பாகிஸ்தானிய வைத்தியர் ஒருவரே உதவி செய்ததாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன்பனெட்டா தெரிவித்துள்ளார். CBS இன் '60 Minutes' நிகழ்ச்சிக்காக அவர் வழங்கிய பேட்டியில் ஒசாமா பாகிஸ்தானிலிருப்பதை எப்படி உறுதி செய்துகொண்டோம் என்பதனை முதன்முறையாக விளக்கியுள்ளார்.


பாகிஸ்தானின் அபோத்பாத் மாடி வீட்டில் ஒசாமா பதுங்கியிருப்பதை ஷாகில் அஃப்ரிடி எனும் பாகிஸ்தானிய வைத்தியரே அமெரிக்க சி.ஐ.ஏ புலனாய்வு பிரிவினருக்கு உறுதிப்படுத்தினராம். தனது இரகசிய திட்டமொன்றின் கீழ் ஒசாமாவின் DNA மூலகங்களை சேகரித்து அது ஒசாமா தான் என்பதனை உறுதிசெய்தாராம். எனினும், இப்போது அவர் சதி முயற்சியின் கீழ் பாகிஸ்தான் அரசினால் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்று வருவதாக பெனட்டா மேலும் தெரிவித்துள்ளனர். எனினும் பாகிஸ்தான் அரசுக்கு ஒசாமா அங்கிருப்பது தெரிந்திருக்க கூடும் என்பதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை. அஃபிரிடியை விரைவில் அவர்கள் விடுதலை செய்வார்கள் அல்லது அமெரிக்க அரசிடம் கையளிப்பார்கள் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF