மிருகங்களிலிருந்து பெறப்படும் இறைச்சிக்கு பதிலாக ஆய்வுகூடங்களில் செயற்கையான முறையில் இறைச்சிகளை தயாரிப்பதற்காக உலகெங்கிலுமுள்ள 30 ஆராய்ச்சி குழுக்கள் முயன்று கொண்டிருக்கின்றன.
இச்செயல்முறை மூலம் இறைச்சிக்காக மிருகங்களை வதைத்தல் குறைவடையும் என உலக விலங்கு நலக்குழுவான Peta தெரிவித்துள்ளது.
இதற்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதேவேளை ஸ்கொட்லன்ட் மாஸ்ரிச்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் மார்க் போஸ்ட் என்ற ஆராய்ச்சியாளர் தனது ஆய்வுகூடத்தில் விரைவில் செயற்கை இறைச்சி உற்பத்தியாகிவிடும் எனக் கூறியுள்ளார்.இவருக்காக டொச் அரசும், ஏனைய ஆர்வலர்களும் 300,000 யூரோவை இந்த ஆய்விற்காக வழங்கியுள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF