Saturday, January 14, 2012

ஒன்று கூடிய இரண்டு சிங்கங்களின் சந்திப்பு!!!அதிர்ந்தது அமெரிக்கா


எதிரிகள் பிரிந்து இருந்தால் பரவாயில்லை.. ஒன்று கூடினால் என்ன நடக்கும்? பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்...
ஆம், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் முன்னாள் கியூப அதிபரான பிடல் காஸ்ட்ரோவும், அமெரிக்கர்களின் புதிய எதிரி என வர்ணிக்கப்படும் ஈரான் அதிபர் முகமட் அஹமது நிஜாதுக்கும் இடையிலான சந்திப்பே அது.

அமெரிக்காவின் இரண்டு பெரிய பகைவர்களின் சந்திப்பு அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இரண்டு சிங்கங்களின் சந்திப்பும் இந்த வாரம் கரிபியன் நாட்டில் தான் இடம்பெற்றுள்ளதுஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ஈரானில் அணு ஆயுத திட்டங்களை முன்னெடுத்து வரும் ஈரான் அதிபர் முகமட் அஹமது நிஜாத் கியூப முன்னாள் அதிபரான பிடல் காஸ்ரோ உடனான சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,

இரண்டு மணி நேரங்கள் இடம்பெற்ற சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.ஈரான் மற்றும் கியூபா உடனான நட்புறவு ஆரம்பத்திலிருந்து சிறப்பாக உள்ளன.உண்மையில் நாங்கள் ஒரே நோக்கத்துக்காக தொடர்ந்தும் போராடுவோம். நாங்கள் ஏராளமான விடயங்கள் பற்றி கலந்துரையாடினோம். சந்திப்பு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். எப்போதும் அதே நட்புணர்வுடன் இருப்போம்.கியூபாவின் தற்போதைய அதிபரான பிடல் கஸ்ரோவின் சகோதரரான ராகுல் காஸ்ரோவையும் ஈரான் அதிபர் சந்தித்து கலந்துரையாடினார்.இவர்களின் சந்திப்பு அமெரிக்காவை கவலை கொள்ள வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF