Tuesday, January 10, 2012

செயற்கை முறையில் கலப்பின குரங்குகளை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை!


அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் செயற்கை முறையில் கலப்பின குரங்குகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.இதன் மூலம் இந்தியாவில் காணப்படும் நீண்ட வால் குரங்குகளை போன்று 3 குட்டிகள் வெற்றிகரமாக பிறந்துள்ளன.உலகிலேயே இது முதல்முறையாக நடந்த சாதனையாகும். இதற்கு முன்பு 2,3 கருமுட்டைகளை இணைத்து கலப்பின குரங்கை உருவாக்கும் சோதனை நடத்தினார்கள். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

தற்போது இந்தியாவில் வாழும் இளம் குரங்கின் நச்சுக்கொடி உட்பட 6 வகையான திசுக்களை கொண்ட கலப்பின கருவை உருவாக்கி இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கின்றார்கள். இப்போது பிறந்துள்ள இந்த 3 கலப்பின குரங்கு குட்டிகளும் ஆண் குட்டிகளாகும்.இந்த குரங்குகள் மனிதர்களின் உடலில் ஏற்படும் நோய்கள் குறித்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இந்த சாதனை விபரங்களை அமெரிக்காவின் ஓரிகான் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF