Tuesday, January 10, 2012

Photo Stage Slide show: புகைப்படங்களை காணொளிகளாக மாற்றம் செய்வதற்கு!

Digital Slideshow Creation made easy
தற்போதைய காலகட்டத்தில் எல்லோரிடமும் கைபேசிகள் உள்ளது. அதிலும் கமெராக்கள் உள்ள கைபேசிகள் சந்தையில் மிக குறைவான விலைக்கு கிடைக்கிறது.மேலும் டிஜிட்டல் கமெராக்கலும் குறைவான விலைக்கு கிடைக்கிறன. இதனால் தற்போது எந்த நிகழ்வையும் நாம் புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்வோம்.
அவ்வாறு நாம் எடுக்கும் புகைப்படங்களை காணொளிகளாக மாற்றம் செய்வதற்கு சந்தையில் பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. அவை யாவும் விலைகொடுத்து மட்டுமே வாங்க வேண்டும்.மேலும் அவை யாவும் அளவில் அதிகமாக இருக்கும். அவ்வாறு உள்ள மென்பொருள்களை நம்மில் பலரால் விலைகொடுத்து வாங்க இயலாது. PhotoStage Slideshow என்னும் மிகச்சிறிய மென்பொருள் ஒன்று உள்ளது. இதன் மூலம் எளிமையாக புகைப்படங்களை காணொளிகளாக மாற்ற முடியும்.
இணையத்தின் உதவியுடன் மென்பொருளை தரவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் ஒரு முறை கணணியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும்.பின் PhotoStage Slideshow அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் Add Photos, Video Clips, and Music என்னும் தெரிவினை அழுத்தி புகைப்படம், காணொளி, அச்சு படம் போன்றவற்றை உள்ளினைக்கவும்.
பின் வேண்டியவற்றின் மீது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் கீழ்நோக்கு இறக்கு விசையை அழுத்தி உள்ளினைக்கவும். பின் வேண்டிய படத்திற்கு இடையில் Effects சேர்த்துக்கொள்ளவும்.பின் SAVE SLIDESHOW என்னும் பொத்தானை அழுத்தி தோன்றும் விண்டோவில் Computer Data என்னும் டேப்பினை தெரிவு செய்து அதில் உங்களுக்கு வேண்டிய போர்மட்டில் காணொளிகளாக சேமித்துக்கொள்ள முடியும். வேண்டுமெனில் Disc என்னும் டேப்பினை அழுத்தி சீடி/டிவிடி யில் நேரடியாக பதிவேற்றம் செய்து கொள்ள முடியும்.
Download PhotoStage Slideshow Software for Windowsதரவிறக்க சுட்டி.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF