மறதி நோய்க்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் மறதி நோயில் இருந்து விடுபட முதலில் இதயத்தை வலுவாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியவந்துள்ளது.
யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் லண்டன், பிரான்சில் உள்ள தொற்றுநோய் மற்றும் மக்கள்தொகை குறித்த ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து ஆராய்ச்சியாளர் அர்ச்சனா சிங் தலைமையில் இது குறித்த ஆய்வு நடத்தின.ஆய்வில் கிடைத்த தகவல் வருமாறு: பொதுவாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டால் முதலில் பாதிக்கப்படுவது இதயம் தான். இதே நினைப்பு மூளைச் செயல்பாட்டையும் பாதிக்கும்.
இதயம், மூளை இரண்டும் ஆரோக்கியமாக இருந்தால் அனைத்து பாதிப்புகளுக்கும் எளிதில் நிவாரணம் உறுதி. மேலும் மறதி நோயால் அவதிப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதில் இருந்து விடுபட முதலில் இதயத்தை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். இந்த செயல்பாடுகள் மறதிக்கு முதல் மருந்தாக அமையும்.