Tuesday, November 30, 2010

தென்கொரியா - அமெரிக்கா கூட்டுப் பயிற்சி: பதட்டம் அதிகரிப்பு:தடுக்க சீனா முயற்சி



தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சியை திட்டமிட்டபடி நேற்று துவக்கியதை அடுத்து, வடகொரியா மஞ்சள் கடல் எல்லையில் உள்ள தன் ஏவுதளங்களில் இலக்கை குறிவைத்து தாக்கும் ஏவுகணைகளைத் தயாராக வைத்துள்ளது. இதனால், கொரிய தீபகற்பத்தில் மேலும் பதட்டம் அதிகரித்துள்ளது. தென்கொரியாவின் மேற்கு பகுதியான மஞ்சள் கடல் பகுதியில் நேற்று தென்கொரியாவும், அமெரிக்காவும் தங்கள் கூட்டு ராணுவப் பயிற்சியை திட்டமிட்டபடி துவக்கின. இப்பயிற்சியில், 75 போர் விமானங்கள் மற்றும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்ட அமெரிக்க அணுசக்தி போர்க்கப்பலான "ஜார்ஜ் வாஷிங்டன்'னும் கலந்து கொண்டிருக்கிறது.

அதோடு, மேலும் மூன்று போர்க்கப்பல்களையும், நீர்மூழ்கிக் கப்பலைத் தாக்கும் போர் விமானங்களையும் இயான்பியாங் தீவில் தென்கொரியா தயார் நிலையில் வைத்துள்ளது. தீவில் இருந்த அலுவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை தென்கொரியா வெளியேற்றிவிட்டது.இந்நிலையில், விவகாரம் மேலும் மோசமாவதைத் தடுக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. சீன அரசின் தலைமை நிர்வாகி டாய் பிங்குவோ உள்ளிட்ட பல உயரதிகாரிகள் நேற்று சியோலில் கூடி, தென்கொரிய வெளியுறவு அமைச்சர் கிம் சுங் ஹ்வானுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.இந்த கூட்டு ராணுவப் பயிற்சியின் போது வடகொரியா தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால், பதிலடி கொடுக்கத் தயாராக இருக்கும்படி, அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு தென்கொரிய அதிபர் லீ மியுங் பாக் உத்தரவிட்டுள்ளார்.

வடகொரியா தயார்: இந்நிலையில், மஞ்சள் கடல் எல்லையை ஒட்டிய தன் ஏவுதளங்களில், குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும் ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளது வடகொரியா. "எல்லையைத் தாண்டி வந்தால் கடுமையான ராணுவ தாக்குதல் நடத்தப்படும்' என்று வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்கொரிய தரப்பில் பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.அமெரிக்காவின் கூட்டு ராணுவப் பயிற்சியை எதிர்க்கும் சீனா, தன் நட்பு நாடான வடகொரியாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. வடகொரிய பார்லிமென்ட் தலைவர் விரைவில் சீனா செல்வார் என சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் "ஷின்ஹுவா' தெரிவித்துள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இந்தியா பற்றி மூவாயிரம் ஆவணங்கள் வெளியீடு: "விக்கி லீக்ஸ்' பரபரப்பு



வாஷிங்டன் : உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள், வாஷிங்டனில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிய இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களைக் கைப்பற்றி, "விக்கி லீக்ஸ்' இணையதளம் நேற்று முன்தினம் வெளியிட்டது. அவற்றில் இந்தியா பற்றிய மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களும் உண்டு.

ஈரானின் அணு உலைகளை அழிக்கும்படி சவுதிஅரேபிய மன்னர், அமெரிக்காவை வற்புறுத்தியது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு, "ஆல்பா டாக்' என பட்டப்பெயர் இட்டது போன்ற பல்வேறு பரபரப்புத் தகவல்கள் அவற்றில் அடங்கியுள்ளன. "விக்கி லீக்சின்' இந்தச் செயலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பரபரப்பான செய்திகளை வெளியிடுவதற்குப் பெயர் பெற்ற "விக்கி லீக்ஸ்' இணையதளம், ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் போர் அட்டூழியத்தை 90 ஆயிரம் ரகசிய ஆவணங்கள் மூலமும், ஈராக்கில் நடந்த அமெரிக்க அட்டூழியத்தை நான்கு லட்சம் ரகசிய ஆவணங்கள் மூலமும் வெளிப்படுத்தியது.

இதனால் எரிச்சல் அடைந்த அமெரிக்கா, "விக்கி லீக்ஸ்' இணையதள நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை துரத்த ஆரம்பித்தது. சமீபத்தில் அவரைக் கைது செய்வதற்கு சுவிட்சர்லாந்து கோர்ட் ஒன்று உத்தரவிட்டது. இந்நிலையில், அமெரிக்கா பல்வேறு நாடுகளிடம் கொண்டுள்ள வெளியுறவுக் கொள்கைகள் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிடப் போவதாக ஜூலியன் சமீபத்தில் தெரிவித்தார். அவற்றை வெளியிடக் கூடாது எனக் கூறிய அமெரிக்கா, அவற்றைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மிரட்டலும் விடுத்தது.

தன் கூட்டணி நாடுகளான இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு முன்னெச்சரிக்கையும் விடுத்தது. ஆனாலும் சொன்னபடியே, ஜூலியன், பிரிட்டனில் இருந்து வெளியாகும், "தி கார்டியன்', நியூயார்க்கின் "தி நியூயார்க் டைம்ஸ்', ஜெர்மனியின் "டெர் ஸ்பைஜெல்', பிரான்சின், "லீ மாண்டே', ஸ்பெயினின் "எல் பைஸ்' ஆகிய ஐந்து பத்திரிகைகள் மூலம், இரண்டு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை நேற்று முன்தினம் இந்திய நேரப்படி நள்ளிரவில் வெளியிட்டார்.

இந்த ஆவணங்கள் மூலம் உலக நாடுகளை அமெரிக்க கண் ணோட்டம், அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் ஒற்றர்களாக வேலை பார்த்தது, சின்னச் சின்ன தீவுகளில் இருந்து தனது அமைச்சரவையில் உள்ள ஹிலாரி கிளின்டன் வரை அனைவரையும் அமெரிக்கா உளவு பார்த்தது என, அமெரிக்காவின் அனைத்து நடவடிக்கைகளும் இப்போது வெளியுலகுக்குத் தெரியவந்துள்ளன.

ஆவணங்கள் கிடைத்தது எப்படி?

ஈரான் தலைநகர் பாக்தாத் நகரின் வெளிப்புறப் பகுதியில் இருந்த அமெரிக்கப் படைத்தளத்தில் பிரேட்லி மேன்னிங் (22) என்ற வீரர், அமெரிக்க தூதரகங்களின் இணையதளங்களில் இருந்து மிக ரகசியமாக இந்த விவரங்களை "சிடி' யில் பதிவு செய்தார். இதற்காக ஒரு நாளில் 14 மணிநேரம் செலவிட்டுள்ளார். இப்படி எட்டு மாதங்களுக்கும் மேல் செலவிட்டு இவ்விவரங்களைப் பதிவு செய்துள்ளார். மொத்தம் 1.6 கிகாபைட்ஸ் கொண்ட அனைத்தையும் ஒரு "தம்ப் டிரைவ்' -ல் பதிவு செய்து, "விக்கி லீக்ஸ்' இணையதளத்திற்கு அளித்துள்ளார்.

ஏழு மாதங்களுக்கு முன் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள இவர், 2011ல் கோர்ட் விசாரணைக்கு உட்படுத்தப்பட இருக்கிறார். இந்தியா பற்றிய ரகசிய ஆவணங்கள்: "விக்கி லீக்ஸ்' வெளியிட்டுள்ள ரகசிய ஆவணங்களில் டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அனுப்பப்பட்டவற்றில் இருந்து எடுக்கப்பட்ட மூவாயிரத்து 38 ரகசிய ஆவணங்களும் உள்ளன. "விக்கி லீக்ஸ்' இணையதளம் நேற்று முன்தினம் இவற்றை வெளியிட்ட போது, உலகம் முழுவதும் அந்த இணையதளத்தை லட்சக்கணக்கானோர் பார்த்ததால், தொழில்நுட்ப ரீதியில் கோளாறு ஏற்பட்டது.

இதனால் இந்தியா பற்றி என்னென்ன விவரங்கள் அவற்றில் கூறப்பட்டுள்ளன என்பது தெரியவரவில்லை. எனினும், பாக்., பிரச்னை குறித்து ஆப்கனில் இந்தாண்டு துவக்கத்தில் நடந்த கூட்டத்தில் இந்தியா விலக்கி வைக்கப்பட வேண்டும் என துருக்கி விரும்பியதால், இந்தியா அழைக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதேநேரம், நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து இரண்டாயிரத்து 278 ஆவணங்களும், இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து மூவாயிரத்து 325 ஆவணங்களும், பாக்., தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து இரண்டாயிரத்து 220 ஆவணங்களும் வெளியாகியுள்ளன. இவற்றில் அந்தந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களின் தினசரி நடவடிக்கைகள், கூட்டங்கள் பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

பாக்.,ன் யுரேனியத்தைக் கைப்பற்ற அமெரிக்கா முயற்சி:

அணுகுண்டு தயாரிக்க உதவும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பாகிஸ்தானின் அணு உலையில் இருந்து எப்படியாவது அகற்றி விட வேண்டும் என்று அமெரிக்கா பல ஆண்டுகளாக முயன்றதையும், அம்முயற்சி தோல்வியில் முடிந்ததையும் "விக்கி லீக்ஸ்' ரகசிய ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன. அந்த ஆயுதங்கள் தலிபான்களின் கைகளில் சிக்கிவிடக் கூடும் என அமெரிக்கா பயப்பட்டது. ஆனால், நேற்று பாக்., வெளியிட்ட அறிக்கையில் அணு ஆயுதங்கள் பத்திரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா கடும் கண்டனம்:

"விக்கி லீக்ஸ்' ரகசிய ஆவணங்களை வெளியிட்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் ராபர்ட் கிப்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தனிநபர்கள், உலக நாடுகளின் அரசுகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என, அனைவரது உரையாடல்களையும் வெளியிட்டுள்ள "விக்கி லீக்சின்' இச்செயல், சட்டவிரோத மானது. இதனால் அமெரிக்க வெளியுறவு நலன்கள் மட்டுமல்லாது, அமெரிக்க கூட்டணி மற்றும் நட்பு நாடுகளின் நலன்களும் பாதிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானை தாக்க சவுதி வற்புறுத்தல்

* அணு ஆயுதங்களைத் தயாரிப்பதில் முனைந்துள்ள ஈரான் மீது போர் தொடுத்து, அதை அழிக்க வேண்டும் என சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா, பஹ்ரைன் மன்னர் ஹமாத், அபுதாபி மன்னர் ஷேக் முகமது ஆகியோர் தொடர்ந்து அமெரிக்காவை வற்புறுத்தியுள்ளனர். சவுதி மன்னர், "அந்தப் பாம்பின் தலையை வெட்டி விடுங்கள்' என ஈரான் குறித்து கூறியுள்ளதாக ஆவணங்கள் கூறுகின்றன.

* ஐ.நா.,வில் பணியாற்றும் முக்கிய உயரதிகாரிகளின் டி.என்.ஏ.,சாம்பிள், கைவிரல் ரேகைகள் பற்றிய விவரங்கள், அவர்களின் இ-மெயில்கள், "பாஸ்வேர்டு'களும் அமெரிக்காவால் சேகரிக்கப்பட்டன. அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர்.

* சீனாவில் இயங்கிய "கூகுள்' இணையதளச் சேவைகளில் சில இன்டெர்நெட் திருடர்கள் ஊடுருவி ஆவணங்களைத் திருடியதன் பின்னணியில் சீன அரசு இருப்பதாக அமெரிக்கா சந்தேகப்பட்டது. அமெரிக்க அரசு, தொழிலதிபர்கள் மற்றும் தலாய் லாமா ஆகியோரின் கம்ப்யூட்டர்களில் சீன அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட நெட் திருடர்கள் புகுந்து தகவல்களைத் திருடியுள்ளனர்.

* வடகொரியா அழிக்கப்பட்ட பின் ஒன்றிணைந்த கொரிய தீபகற்பத்தை உருவாக்குவது குறித்து, அமெரிக்காவும் தென்கொரியாவும் ஆலோசித்துள்ளன. இதற்காக சீனாவுக்கு சில வர்த்தக சலுகைகளை தென்கொரியா ஏற்படுத்தித் தர வேண்டும் என, அமெரிக்க தூதர் தென்கொரியாவுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

* இரட்டைக் கோபுர தகர்ப்புக்கு இரண்டாண்டுகள் முன்பு, பாகிஸ்தானில் இருந்த அமெரிக்க உயரதிகாரிகள், ஒசாமா பின்லாடனுக்கு எதிராகப் போர் தொடுப்பது பற்றி அமெரிக்கா தீவிரப் பிரசாரம் செய்ய வேண்டும் என விரும்பினர்.

* ஆப்கன் துணை அதிபர் கடந்தாண்டு, ஐக்கிய அரபு எமிரேட்சுக்குச் சென்ற போது அவரை 240 கோடி ரூபாயோடு, அந்நாட்டு அதிகாரிகள் பிடித்தனர். அப்போது அமெரிக்கா தலையிட்டு அவரை விடுவித்தது.

* வடகொரியாவில் இருந்து ஈரானுக்கு அனுப்பப்பட்ட ஏவுகணைகள் அடங்கிய கப்பலை உடனடியாகத் தடுத்து நிறுத்தும்படி சீனாவை அமெரிக்கா வற்புறுத்தியது. அந்த ஏவுகணைகள் மூலம் ஈரான், இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளைத் தாக்கக் கூடும் என அமெரிக்கா நம்பியது.

* ஏமன் அதிபர், அமெரிக்காவின் ஆசியப் படைகளுக்கான தளபதி ஜெனரல் டேவிட் பெட்ரசிடம், ஏமனில் உள்ள அல் - குவைதா பயங்கரவாதிகளைஅழிப்பது குறித்துப் பேசிவிட்டு,"வெடிகுண்டுகள் எங்களுடையவை, அமெரிக்காவினது அல்ல என்று தொடர்ந்து நாங்கள் கூறுவோம்' என்கிறார்.

சர்ச்சை ஜூலியன்:

ஊபல்வேறு அரசுகளின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பும் இணையதளம்தான் "விக்கிலீக்ஸ்'. ஊஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரும், இணையதளங்களில் இருந்து தகவல்களைத் திருடுவதில் கைதேர்ந்தவருமான ஜூலியன் அசேஞ்ச் என்பவர்தான் இதன் நிறுவனர். ஊஆப்கானிஸ்தானில் அமெரிக்க அட்டூழியம் குறித்த 90 ஆயிரம் ஆவணங்கள், ஈராக்கில் அமெரிக்க அட்டூழியம் குறித்த நான்கு லட்சம் ஆவணங்கள் இதுவரை இந்த இணையதளத்தால் வெளியிடப்பட்டுள்ளன. ஊஈராக் தலைநகர் பாக்தாத்தில், அமெரிக்க ஹெலிகாப்டர் ஒன்று பொதுமக்களைச் சுட்டுக் கொன்ற வீடியோவையும் வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட சாரா பாலின் என்பவரின் இ-மெயிலில் இருந்து சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

விளாடிமிர் புடினுக்கு நாயின் பெயர்

* பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஆன்ட்ரூ என்பவரின் தவறான நடத்தை, மற்றும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பற்றிய விமர்சனமும் இந்த ஆவணங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

* ஐரோப்பிய தலைவர்களில் வலிமையற்றவர், முட்டாள், திறமையற்றவர் என, இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியை ரோமில் உள்ள அமெரிக்க தூதர் குறிப்பிடுகிறார்.

* லிபியா தலைநகர் டிரிபோலியில் உள்ள அமெரிக்க தூதரகம், லிபியா அதிபர் கடாபி, தனது உக்ரேனிய நாட்டு நர்ஸ் பெண் ஒருவருடன் எப்போதும் திரிவதாகவும், மிக உயரமான கட்டடங்களில் தங்குவதற்கு அவர் பயப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

* ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகம், ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினை "ஆல்பா டாக்' என்று குறிப்பிடுகிறது. மேலும், இத்தாலி அதிபருக்கும் அவருக்கும் இடையில் உள்ள நெருக்கத்தைப் பற்றியும் விமர்சிக்கிறது.

* வடகொரிய அதிபர் கிம் ஜாங் இல், "வயதான பேர்வழி' என்றும், ஈரான் அதிபர் அகமதி நிஜாத், "ஹிட்லர்' என்றும் விமர்சிக்கப்படுகின்றனர்.

* தென்னாப்ரிக்காவின் வெளியுறவு அமைச்சர், ஜிம்பாப்வே அதிபருடன் ஒப்பிடப்பட்டு "பித்துப்பிடித்த வயதானவர்' என்று கூறப்படுகிறார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

விக்கிலீக்ஸ் மீது குற்றப் புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்ள அமெரிக்கா முடிவு



தேவையற்ற சர்ச்சைகளில் அமெரிக்காவை மாட்டி விட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி 250 ,000 ஆவணங்களை நேற்று பகிரங்கப்படுத்திய விக்கிலீக்ஸ் மீது குற்றப் புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

நாட்டின் முக்கிய ரகசிய ஆவணங்களை திருட்டுத்தனமாக இணையத்தை பயன்படுத்தி எடுத்திருப்பதால் இது ஒரு சைபர் தாக்குதல் எனவும் அமெரிக்கா வருணித்துள்ளது. விக்கிலீக்ஸ் " தீவிரவாதிகளின் கூடாரம் " என அமெரிக்கா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னணி அரசியல்வாதி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களின் மூலம் ஹிலாரி கிளிண்டனின் பிற நாடுகளை வேவு பார்க்கும் வேலைகள் உள்ளிட்ட பல விடயங்களும் அம்பலமானதால் விக்கிலீக்ஸ் மீது நடவடிக்கை எடுப்பதில் அவர் மிகுந்த முனைப்புடன் செயலாற்றி வருவது தெரிய வருகிறது.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் அமெரிக்காவிற்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த சர்வதேச நாடுகளுக்கும் எதிர்ப்பான ஒன்று என ஆவேசமாகக் கூறியுள்ளார். சர்வதேச சட்டங்களுக்கு புறம்பாக ஆவணங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர இரகசியங்கள் விக்கி லீக்ஸ் இணையத்தால் பரகசியம்!


விக்கிலீக்ஸ் இணையத்தளம் அமெரிக்க ராஜாங்க அலுவலர்கள் அனுப்பிய இரண்டரை லட்சம் ரகசிய செய்திகளை சேகரித்து அவற்றில் 220 ஐ வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள இரண்டரை லட்சம் ரகசிய செய்திகளும், ‘கார்டியன்’, ‘நியூயார்க் டைம்ஸ்’உள்ளிட்ட ஐந்து ஊடக குழுமங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. 

வெளியிடப்பட்டுள்ள ரகசிய ஆவணங்களில் உள்ள முக்கிய சாரம்சங்களை பார்ப்போம்.

இரான் மீது தாக்குதல்

பல அரபு நாட்டு தலைவர்களும், அவர்களது பிரநிதிகளும் இரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவை வற்புறுத்தியுள்ளனர். இரானின் சந்தேகத்துக்கு உரிய அணு ஆயுத தயாரிப்பு திட்டத்தை நிறுத்தவே இந்த தாக்குதல் கோரிக்கை. 

ஏப்ரல் 2008 ஆம் ஆண்டு, வாஷிங்டனில் இருக்கும் சவுதி அரேபிய தூதர் அடெல் அல் ஜுபைர், சவுதி மன்னர் அப்துல்லா, அடிக்கடி அமெரிக்கா இரான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறுவதாக தெரிவித்துள்ளார்

அமெரிக்கா ‘பாம்பின் தலையை வெட்ட வேண்டும்’ என்று மன்னர் விரும்புவதாக அல் ஜுபைர் கூறுகிறார். அதே சமயம் வெளியுறவுத்துறை அமைச்சரோ, தெஹ்ரான் மீது தீவிரமான தடைகளை விதிக்க வேண்டும் என்றே அவர் கூறியுள்ளார். 

பஹ்ரைனின் மன்னர் ஹமத் பின் இசா அல் காலிபாவுக்கும் அமெரிக்க இராணுவ ஜெனரல் டேவிட் பெட்ரயஸுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில், ‘எப்படியாவது’ இரானின் அணு திட்டத்தை நிறுத்துமாறு மன்னர் கூறியுள்ளார். 

ஐ.நாவில் வேவு பார்ப்பது

அமெரிக்க ராஜாங்கத்துறை செயலர் ஹில்லாரி கிளிண்டனின் அவர்களின் பெயரில் அனைத்து ராஜாங்க அதிகாரிகளுக்கும் அனுப்பபட்டுள்ள ரகசிய செய்தியில், ஐ.நாவில் பணிபுரியும் முக்கிய அதிகாரிகளின் உயிரியில் தகவல்களான, மரபணு, கைரேகை போன்றவற்றை சேகரிக்குமாறு கூறப்பட்டுள்ளது. 

துணை செயலர்கள், விசேஷ அமைப்புகளின் தலைவர்கள், பிரதான ஆலோசனையாளர்கள், தலைமை செயலரின் முக்கியமான செயலர்கள், அமைதி படையினரின் தலைவர்கள், இராணுவ தலைவர்களின் போன்றவர்களின் தகவல்கள் சேகரிக்க சொல்லப்பட்டுள்ளது. 

அதே போன்று கிரெடிட் கார்ட், மின்னஞ்சல் முகவரிகள், ரகசிய எண்கள், பெயர்கள், கணிணீ வலைகளுக்கான ரகசிய குறியீடுகள் போன்றவற்றை சேகரிக்குமாறும் கூறப்பட்டுள்ளது. 

இது போன்ற ஒன்பது ரகசிய உத்தரவுகள் ஹில்லாரி கிளிண்டன் மற்றும் கொண்டலீசா ரைஸின் பெயரில் அனுப்பப்பட்டுள்ளது.
உலக தலைவர்கள் மீதான கருத்து

இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோணியை ரோமில் உள்ள அமெரிக்க ராஜாங்க அதிகாரி ஒருவர், பொறுப்பற்ற, சுயதம்பட்டம் அடிக்கும் நவீன ஐரோப்பாவுக்கு பிரயோஜனமில்லாத தலைவர் என்று வர்ணித்துள்ளார். 

அதே போன்று ஜெர்மன் சான்சிலர் ஏஞ்சாலா மெர்கல் அவர்களை எவ்விதமான கற்பனா திறன் இல்லாத தலைவர் என்றும், லிபிய தலைவர் கர்னல் கடாபி ஒரு உக்ரைன் பேரழகியையே பெரிதும் நம்பியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

வடகொரிய தலைவர் கிம் ஜோங் இல் அவர்களை தடுமாறி கொண்டிருக்கும் பெருசு என்று வர்ணித்துள்ள ராஜாங்க அதிகாரிகள் இரான் அதிபர் மஹமூது அஹெமெதிநிஜாத் அவர்களை ‘ஹிட்லர்’ என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

உலக தலைவர்களை இவ்வாறு கிண்டலடிக்கும் தொனியில் ராஜாங்க அதிகாரிகள் தகவல்களை அனுப்பியிருந்தாலும், இவற்றால் எல்லாம் ராஜாங்க உறவுகள் பாதிக்காது என்று பிபிசியின் ராஜாங்க ஜோனாத்தான் மார்க்கஸ் கூறுகிறார். 

இதே நேரத்தில் நியூயார்க் டைம்ஸில் வெளியாகியுள்ள ரகசிய செய்தி ஒன்றில், பாகிஸ்தானின் அணுசக்தி உலைகளில் உள்ள ரேடியோ கதிர்வீச்சு கொண்ட பொருட்கள் குறித்து அமெரிக்கா கொண்டுள்ள கவலைகளையும், அவற்றை பயங்கரவாத தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படலாம் என்று அது கொண்டுள்ள கவலையும் வெளியிடப்பட்டுள்ளது. 

அதே போன்று மிகவும் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை பாகிஸ்தானில் இருந்து கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் வெளியேற்ற அமெரிக்கா முயற்சித்து வருவதவும் தெரிய வந்துள்ளது. 

இது போன்ற தகவல்கள் ராஜாங்க உறவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் எனவும் ஜோனாத்தான் மார்க்கஸ் கூறுகிறார். 
விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜுலியன் அஸாங்கே, அரபு செய்தியாளர்களிடம் வீடியோ மூலம் ரகசிய செய்தி கசிவு தொடர்பாக பேசும் போது, அமெரிக்க இராணுவத்தில் இருக்கும் ஒரு சிலர் தகவல்களை வெளியிட விரும்புவதாக கூறினார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா மேற்கொண்ட முயற்சியை ஹிலாரி கிளின்டன் கேலி செய்ததையும் அம்பலப்படுத்தியுள்ளது. 

ஆசியாவிலிருந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கான நாடுகளில் தாம்தான் முதலாவதாக இருப்பதாக இந்தியா தன்னைத்தானே கூறிக்கொள்வதாக ஹிலாரி கேலியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கு இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பான விவரங்களை திரட்டி அனுப்புமாறு தனது தூதரக அதிகாரிகளுக்கு ஹிலாரி உத்தரவிட்டுள்ளதாகவும் "விக்கிலீக்ஸ்" வெளியிட்டுள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

ஆகமொத்தம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அதிபர் ஒபாமா அறிவித்ததெல்லாம் வெறும் கண்துடைப்பே என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர இரகசியங்கள் அடங்கிய 3166 ஆவணங்கள் கூட விக்கி லீக்ஸின் வசம் உள்ளன. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Monday, November 29, 2010

பணத்துக்காக 2 மகள்களை கொன்ற தந்தை



உத்தரபிரதேசம் மாநிலம் ஜாம்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராம்கிஷன். இவருக்கு சங்கீதா (வயது 18), சுனிதா (14) அனிதா (12) பிங்கி என்ற மகள்களும் ராகுல் என்ற மகனும் இருந்தனர்.
ராம்கிஷன் தனது குழந்தைகள் அனைவர் பெயரிலும் இன்சூரன்சு பாலிசி எடுத்து இருந்தார். சங்கீதா, அனிதா, சுனிதா, பெயர்களில் தலா ரூ.2 லட்சம் பாலிசியும், பிங்கி பெயரில் ரூ.1 லட்சம் பாலிசியும் எடுத்து இருந்தார். மேலும் தனது பெயரிலும் மகன், மனைவி பெயரிலும் பாலிசி எடுத்து இருந்தார்.

இந்த நிலையில் ராம்கிஷன் நிலம் ஒன்றை வாங்க முடிவு செய்தார். இதற்கு ஏராளமான பணம் தேவைப்பட்டது. இதற்காக 2 மகள்களை கொன்று இன்சூரன்சு பணத்தை பெற திட்ட மிட்டார். இது பற்றி தனது நண்பர் பவான் என்பவரிடம் ஆலோசனை நடத்தினார். அவர் ரூ.50 ஆயிரம் கொடுத்தால் 2 மகள்களையும் கொலை செய்து விடுவதாக கூறினார்.

கடந்த 22- ந்தேதி ராம்கிஷன் தனது மகள்கள் சுனிதா, அனிதா இருவரையும் சினிமா பார்க்கலாம் என கூறி அழைத்து சென்றார். பின்னர் இருவரையும் பவானிடம் ஒப்படைத்து சினிமாவுக்கு அழைத்து செல்லுமாறு கூறினார்.

பவான் இருவரையும் அருகில் உள்ள தியேட்டருக்கு அழைத்து சென்றார். படம் பார்த்து விட்டு இரவில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது இருவரையும் அங்குள்ள ஆற்றில் அவர்கள் வந்த சைக்கிளோடு தள்ளி விட்டார். ஆற்றில் அதிகம் வெள்ளம் சென்றது அதில் மூழ்கி இருவரும் இறந்தனர்.

மறுநாள் ராம்கிஷன் போலீசில் சென்று ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது 2 மகள்களும் வீட்டில் இருந்த 100 ரூபாயை எடுத்துக் கொண்டு சைக்கிளில் வெளியே சென்றனர். அதன் பிறகு வீடுதிரும்பவில்லை என்று கூறி இருந்தார்.

போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையே இருவரின் பிணமும் பக்கத்து ஊரில் கரை ஒதுங்கி கிடந்தது தெரிய வந்தது. ராம்கிஷன் மீதே போலீசாருக்கு சந்தேகம் வந்தது. அவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக கூறினார். இதனால் சந்தேகம் வலுத்தது. போலீசார் தீவிரமாக விசாரித்த போது நடந்த உண்மைகளை ஒத்துக் கொண்டார்.

இதையடுத்து ராம்கிஷன், பவான் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

சாப்பிடுவதை ருசித்து சாப்பிடு


தினமும் நாம் சாப்பிடுகிறோம். வாழ்நாள் முழுவதும் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். சாப்பிடாமல் நாம் உயிர்வாழ முடியாது என்பது நமக்கு மறப்பதில்லை.
ஆனால் சாப்பிடும்போது செய்ய வேண்டிய சில விஷயங்களைத்தான் நாம் மறந்து விடுகிறாம்.
சிலர் மிக வேகமாக சாப்பிடுவார்கள். சிலர் மிக மெதுவாக சாப்பிடுவார்கள். எப்படி சாப்பிட்டாலும் சரி, வாயில் போடப்பட்ட உணவு நன்றாக கடிக்கப்பட்டு மெல்லப்பட்டு, சுவைக்கப்பட்டு, கூழாக்கப்பட்டு, அதன்பின் வயிற்றுக்குள் போக வேண்டும். அதுதான் முக்கியம். அப்படி அப்படியே விழுங்கக் கூடாது.
சிலர் இரண்டே நிமிடத்தில் சாப்பிட்டு முடித்துவிடுவர். இன்னும் சிலர் ஒவ்வொரு வேளையும் சுமார் முக்கால் மணி நேரம் சாப்பிடுவர். அதுவும் தவறு, இதுவும் தவறு.
சைவ உணவை சீக்கிரம் சாப்பிட்டு முடித்து விடலாம். அசைவ உணவு சாப்பிடும்போது கொஞ்சம் லேட்டாகத்தான் செய்யும். குறைந்தது சுமார் 5 நிமிடங்களும், கூடுதலாக சுமார் பதினைந்து நிமிடங்களும் சாப்பிடுவதற்காக ஒதுக்குவது நல்லது. ஐந்து நிமிடங்களுக்கு குறைவாக சாப்பிடுவதும் நல்லதல்ல. பதினைந்து நிமிடங்களுக்கு அதிகமாக சாப்பிட்டுக் கொண்டிருப்பதும் நல்லதல்ல.
எந்த உணவை நாம் சாப்பிட்டாலும் கடித்து சுவைத்து அதன்பின்தான் விழுங்க வேண்டும். கோழி விழுங்குவதைப்போல வாயில் போடும் உணவை அப்படியே விழுங்கக்கூடாது. நிறையபேர் இப்படித்தான் சாப்பிடுகிறார்கள்.
ஒரு முழு நெல்லை கோழி அப்படியே விழுங்குகிறது. கோழிக்கு பற்கள் கிடையாது. அதனால் மெல்லுவது கிடையாது. அதற்கு அலகு அதாவது மூக்கும், நாக்கும்தான் உள்ளது. கோழி உண்ணும் உணவு அதனுடைய அலகாலும், வயிற்றினாலும்தான் சிறுசிறு துண்டுகளாகவும் கூழாகவும் ஆக்கப்படுகிறது. அந்த பச்சை நெல்லை ஜீரணிக்க வைக்கக்கூடிய அளவுக்கு மிக சக்தியான என்சைம் மற்றும் உணவு மண்டல அமைப்பு கோழிக்கு இருக்கிறது. நமக்கு அப்படி இல்லை.
நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆவதற்கு வாயிலுள்ள உமிழ் நீர் முக்கிய பங்கு வகிக்கின்றது. மனிதனின் வாயின் இரண்டு பக்கங்களிலும் மூன்று ஜோடி உமிழ்நீர் சுரப்பிகள் இருக்கின்றன. அவையாவன. 1.பரோட்டிட் சுரப்பி, 2.சப்மேன்டிபுலார் சுரப்பி, 3.சப்லிங்குவல் சுரப்பி. இந்த மூன்று சுரப்பிகளிலிருந்தும் வரும் குழாய்கள் வாயினுள் வந்துதான் திறக்கின்றன.
பரோட்டிட் சுரப்பிதான் இந்த மூன்றில் மிகப்பெரியது. அடுத்ததாக உள்ள சப்மேன்டிபுலார் சுரப்பிதான் 70 சதவீத உமிழ்நீரை சுரக்கிறது. ஐந்து சதவீத உமிழ்நீர், மூன்றாவதாக உள்ள சப்லிங்குவல் சுரப்பியிலிருந்து சுரக்கின்றது.
உணவை பார்த்தவுடன், உணவை நினைத்தவுடன், உணவின் வாசனையை நுகர்ந்தவுடன் உமிழ்நீர் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கிறது. உமிழ்நீரில் மியூகஸ், புரோட்டின், தாது உப்புக்கள் மற்றும் அமைலேஸ் என்கிற என்சைம் ஆகியவை இருக்கின்றது. ஒரு நாளைக்கு சுமார் 1 முதல் 2 லிட்டர் உமிழ்நீர் வாயிலிருந்து வயிற்றுக்குள் தள்ளப்படுகிறது.
எல்லா நேரமும் நம்மை அறியாமலேயே நாம் வாயில் சுரக்கும் உமிழ்நீரை உள்ளே விழுங்கிக் கொண்டுதான் இருக்கிறோம். உமிழ்நீரிலுள்ள என்சைம் நாம் சாப்பிடும் உணவில் ரசாயன மாற்றங்களை வேகமாக ஏற்படுத்த உதவி செய்கிறது. இந்த என்சைம் இல்லாவிட்டால் நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆக வாரக்கணக்கில் ஏன் மாசக் கணக்கில்கூட ஆகும். அப்படியானால் நம் உடலிலுள்ள தசைகள், நரம்புகள், எலும்புகள் இவையெல்லாம் ஒழுங்காக வேலை செய்யாது. இவையெல்லாம் வேலை செய்யாவிட்டால் நம்மால் உயிர்வாழ முடியாது.
உமிழ்நீரிலுள்ள அமைலேஸ் என்கிற நொதி (என்சைம்) நாம் சாப்பிடும் உணவிலுள்ள ஸ்டார்ச் மற்றும் கார்போஹைட்ரேட்டை மால்டோஸ் என்கிற சர்க்கரைப் பொருளாக மாற்று வதற்கு உதவி செய்கிறது. உணவு சிறுகுடலில் போய்ச் சேரும்போது இன்னும் அதிகமாக அமைலேஸ் என்சைம் கணையத்திலிருந்து சுரக்கப்பட்டு உணவில் மிச்சம் மீதியிருக்கும் ஸ்டார்ச்சையும், மால்டோசாக மாற்றிவிடுகிறது. மால்டேஸ் என்கிற இன்னொரு என்சைம் எல்லா மால்டோசையும் குளுக்கோசாக மாற்றிவிடுகிறது. இந்த குளுகோஸ்தான் கடைசி யாக ரத்தத்தில் கலக்கிறது. என்னவென்று புரியவில்லையா? ஒன்றுமில்லை நாம் சாப்பிடும் உணவிலுள்ள சர்க்கரையை வாயிலுள்ள என்சைம் குளுகோசாக மாற்றி ரத்தத்தில் கலக்கச்செய்கிறது, அவ்வளவுதான்.
நமது உமிழ்நீரிலுள்ள மிïசின் என்கிற பொருள் வாய் எப்பொழுதும் ஈரமாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது. அதேமாதிரி உமிழ் நீரிலுள்ள லைசோசைம் என்கிற பொருள் நாம் சாப்பிடும் உணவிலுள்ள கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை அழித்துவிடுகிறது.
வயிற்றுக்குள் போய் எல்லா உணவும் ஜீரணம் ஆகிவிடும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தவறு. உணவு வாயில் போடப்பட்டவுடன் உதடு, கன்னம், நாக்கு ஆகியவற்றிலுள்ள தசைகள் ஒன்று சேர்ந்து வாயினுள் போடப்பட்ட உணவை வாயினுள்ளேயே சிறிது நேரம் வைத்துக் கொண்டிருக்கும்படி செய்கிறது. அதே நேரத்தில் வாயிலுள்ள 3 உமிழ்நீர் சுரப்பிகள் சுரக்கும் திரவம் வாயில் போடப்பட்ட உணவுக் கவளத்தைச் சூழ்ந்து செரிமானத்திற்கு தயாராகிறது. பற்களுக்கிடையில் மாட்டிய உணவு துண்டு துண்டாக வெட்டப்பட்டு பின்பக்கத்திலுள்ள பற்களால் மிகச்சிறிய துண்டுகளாக ஆக்கப்பட்டு விழுங்குவதற்கு ஏதுவாக தயாராகிறது.
நாக்கிலுள்ள சுவை நரம்புகள் நாக்கில் வந்து தொடும் உணவானது இனிப்பா, புளிப்பா, உப்பா, துவர்ப்பா என்பதைக் கண்டுபிடித்து அதற்குத் தேவையான சரியான என்சைம் களை சுரக்கச் செய்கிறது. நாக்கு இப்படியும் அப்படியும் புரளும்போது நாக்குக்கு இடை யில் உணவுத்துண்டுகள் பாதி நிலையில் ஜீரணமாகி ஒரு உருண்டையாக ஆக்கப்பட்டு நாக்கு மூலமாகவே அந்த உணவு உருண்டை தொண்டைக்குள் தள்ளப்படுகிறது. தொண்டையிலிருந்து வயிற்றுக்குள் இறங்கிய உணவு அங்குள்ள 5 என்சைம்களுடன் சேர்ந்து மேற்கொண்டு ஜீரணமாகும் வேலையை ஆரம்பிக்கிறது.
வெற்றிலை, பாக்கு, புகையிலை, பான், ஜர்தா போன்றவற்றைத் தொடர்ந்து போடும் பழக்க முள்ளவர்களுக்கு வாயினுள் வந்து முடியும் உமிழ்நீர் சுரப்பிகளின் குழாய் பாதிக்கப்பட்டு அடைபடும் வாய்ப்பு அதிகம். எனவேதான் இத்தகைய பழக்கம் உள்ளவர்களுக்கு சரிவர உமிழ்நீர் சுரக்காமல் அடிக்கடி தொண்டை காய்ந்து போய்விடுகிறது.
இதேபோல் பற்களை இழந்த ஒருவருக்கு சரியான சத்தான உணவு கிடைக்காது. காரணம் அவரால் நன்றாக மெல்ல முடியாததால் அவர் சாப்பிடும் உணவு சரியான முறையில் ஜீரணம் ஆகாமல் உணவிலுள்ள சத்தான பொருட்கள் உடலுக்குப் போய்ச் சேருவதில்லை. எனவே இவர்களுக்கு தேக ஆரோக்கியமும் குறைந்துவிடும்.
ஆகவே சாப்பிடுங்கள். நன்றாக சாப்பிடுங்கள். உணவை நன்கு மென்று சாப்பிடுங்கள். உணவை அள்ளிப்போட்டு வயிற்றின் உள்ளே தள்ளுவதற்கு மட்டும்தான் வாய் உபயோகப்படுகிறது என்று தவறாக நினைத்து விடாதீர்கள். சாப்பிடும் உணவு ஜீரணம் ஆகும் வேலை வாயிலேயே ஆரம்பித்துவிடுகிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Sunday, November 28, 2010

சவுதி "பேஸ்புக்' இணையதளத்திற்கு நெருக்கடி



ரியாத் : "பேஸ்புக்' இணையதள சேவைக்கு, சவுதி அரேபியாவில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய வழி சட்ட திட்டங்களை கடைபிடிக்கும் சவுதி அரேபியா, குற்றம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவதில் பெயர் பெற்ற நாடு. நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக முறைகளை நிர்வகிப்பதில் இஸ்லாமிய மதத் தலைவர்கள் தான் பெரும்பங்கு வகிக்கின்றனர்.

உலக அளவில் பிரபலமான, "பேஸ்புக்' சமூக இணையதளம் சவுதியின் சட்ட திட்டங்களை மீறுவ தாக, குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், சவுதி தகவல் தொடர்புத் துறை, "பேஸ்புக்' சமூக இணையதளத்தை கடந்த வாரம் தடை செய்தது. இதுகுறித்து சவுதி தகவல் தொடர்பு அமைச்சக ஊழியர் ஒருவர் கூறுகையில், "நாட்டு மக்கள் கடைபிடித்து வரும் கலாசார பழக்க வழக்கங்களை மீறும் வகையில், "பேஸ்புக்' இணையதள சேவைகள் உள்ளன.

இதனால், அதற்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது,' என்றார்.அடுத்த சில நாட்களில் தனது முடிவை மாற்றிக் கொண்ட சவுதி தகவல் தொடர்பு அமைச்சகம், இந்த தடையை நீக்கியுள்ளது. எனினும், தனது சேவை முறைகளில் திருத்தம் செய்யும்படி, சவுதி "பேஸ்புக்' அலுவலகம் வற்புறுத்தப்பட்டுள்ளது.

இதனால், "பேஸ் புக்' இணையதளத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.சில நாட்களுக்கு முன், தனியார் "பிளாக்' ஒன்றில், "நான்தான் கடவுள்' என்று கூறி மோசடி செய்த ஒருவனை "பேஸ்புக்' உதவியுடன் சவுதி போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, வங்க தேசம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளும், "பேஸ்புக்' இணையதளத்தை தடை செய்துள்ளன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

முழு உடல் பரிசோதனை அவசியமானது தான்: சொல்கிறார் ஒபாமா



வாஷிங்டன் : "அமெரிக்க விமான நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள முழு உடல் பரிசோதனைக் கருவிகள், நாட்டின் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளத் தேவையானவைதான்' என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். இரட்டைக் கோபுரத் தகர்ப்புக்குப் பின் அமெரிக்காவின் பல்வேறு விமான நிலையங்களில், முழு உடல் பரிசோதனைக் கருவிகளான, "ஸ்கேனர்கள்' வைக்கப்பட்டுள்ளன.

இக்கருவிகள், தன்னைக் கடந்து செல்லும் ஒருவரது உடலை முழுமையாகக் காட்டும்.அமெரிக்காவைச் சூழ்ந்துள்ள பயங்கரவாத அச்சுறுத்தல்களை சமாளிக்கவும், தடுக்கவும் இக்கருவிகள் பயன்படும் என்பதால் இவை அனைத்து விமான நிலையங்களிலும் பொருத்தப்பட்டுள்ளன. எனினும் விமானப் பயணிகளில் ஒரு தரப்பினர் இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தனிநபரின் அந்தரங்கம் வெளிப்படையாக்கப் படுவதாக அவர்கள் ஆட்சேபித்து வருகின்றனர். இதுகுறித்து அமெரிக்க அதிபர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "நாம் இதைக் கடைப்பிடிக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். இதுகுறித்த மக்களின் எண்ணங்களை நான் அறிவேன். என்றாலும், விமானத்தைத் தகர்த்து அதில் உள்ள நூற்றுக்கணக்கான பேர் பலியாகும் சூழலைத் தவிர்க்க வேண்டும் என்றால், நான் உட்பட நம் அனைவருக்கும் இந்தப் பாதுகாப்பு அவசியம்' என்று தெரிவித்துள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF