Sunday, November 21, 2010

உடம்பு முழுதும் தேனீக்களுடன் உற்சாகமாய் சிரிக்கும் விசித்திரமான ஆணும், பெண்ணும் படங்களுடன்


இந்த படங்களில் நீங்கள் பார்ப்பது ஒரு சீனாவில் உள்ள தேனீப் பண்ணையின் தலைவர் தன் நிறுவன பெண் ஊழியர் ஒருவருடன் உடம்பு முழுதும் தேனீக்கள் மொய்க்க உற்சாகமாக காமேராவிற்கு போஸ் கொடுக்கும் காட்சியைத் தான்.

ஒரு தேனீ ரீங்காரிமிட்டுக் கொண்டு வந்தாலே அதை துரத்துவதிலும் தப்பித்து ஓடுவதிலும் மனிதர்கள் முனைப்புக் காட்டும் போது முகத்திற்கு மட்டும் சிறிதளவு இடம் விட்டு விட்டு முழுவதும் பல ஆயிரக்கணக்கான தேனீக்களுடன் சிரிக்கும் இவர்களை பார்க்கும் போது வியப்பாகவும், பயமாகவும் இருக்கிறது.

ஆனால் இருவரிடத்திலும் எந்த விதமான அசௌகரியமோ , பயமோ ஏற்பட்டதாகத் தெரியவில்லை. தேனீக்கள் ஒன்றும் செய்யாது என்ற உறுதியான எண்ணம் இருவரின் மனங்களிலும் இருப்பது மட்டும் கண்களில் தெளிவாகத் தெரிகிறது. எது எப்படியோ நம்மால் இதனை நம்ப முடியவில்லை. இதற்காக தனியான பயிற்சி ஏதும் எடுத்திருப்பார்களோ என்றே தோன்றுகிறது.



பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF