Thursday, November 11, 2010

கொழும்பில் 400 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி

இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தினுள் கொழும்பில் 400.2 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

1992 ஆம் ஆண்டின் பின்னர் கொழும்பில் பதிவாகியுள்ள அதிக மழை வீழ்ச்சி இதுவென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது.
நேற்று மாலை முதல் பெய்த அடை மழை காரணமாகக் கொழும்பின் பிரதான வீதிகள் உள்ளிட்ட சில வீதிகள் நீரில் மூழ்கியிருந்தன.
இதன் காரணமாக இன்று அதிகாலை முதல் கொழும்பு நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
மழை காரணமாகப் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாயினர்.
குறிப்பாகப் பாடசாலை மாணவர்களும் பணியிடங்களுச் செல்வோரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
இதேவேளை கொழும்பு நகரை அண்மித்த பிரதேசங்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டன.
குறிப்பாகக் கல்கிஸ்ஸ, ரத்மலானை, கட்டுநாயக்க ஆகிய பிரதேசங்களிலும் வெல்லம்பிட்டி, சேதவத்தை, கொலொன்னாவை, கிருலப்பனை ஆகிய பகுதிகளிலும் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தினுள் இரத்மலானைப் பகுதியில் 382.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் கட்டுநாயக்க பகுதியில் 160.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF