Wednesday, November 24, 2010

புல்லட் ரெயிலை விட வேகம் 1600 கி.மீ. வேகத்தில் ஓடும் அதிநவீன கார்



உலகிலேயே அதிவேகமாக இயங்கும் புல்லட் ரெயில் சீனாவில் செயல்பாட்டில் உள்ளது. இது மணிக்கு 1200 கி.மீ. வேகத்தில் பாய்ந்து செல்கிறது. ஆனால் அதைவிட அதிவேகமாக செல்லக்கூடிய கார் தயாரிக்கப்பட உள்ளது. மணிக்கு சுமார் 1600 கி.மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லத்தக்க இக்காரை இங்கிலாந்து விஞ்ஞானிகள் உருவாக்க உள்ளனர். இக்கார் தயாரிக்கும் பணியில் ரிச்சர்ட் நோபல் என்பவர் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இப்பணி வருகிற ஜனவரி மாதம் தொடங்கப்பட உள்ளது.

அதில், அதிசக்தி வாய்ந்த ஜெட் என்ஜின் மற்றும் ராக்கெட் பொருத்தப்படுகிறது. மேலும், இதன் பாகங்கள் மிக மெலிதான உலோக கலவையினால் அமைக்கப்பட உள்ளது. மேலும் 4 அலுமினிய சக்கரங்களும் பொருத்தப்பட உள்ளன. இக்கார் வருகிற 2012-ம் ஆண்டு பயன்பாட்டில் வரும். அப்போது அதிவேகமாக இயங்கி உலக சாதனை படைக்கும் என விஞ்ஞானி ரிச்சர்ட் நோபல் தெரிவித்துள்ளார். ரிச்சர்ட் நோபல் ஒரு என்ஜினீயர் ஆவார்.

இவர் சாதனை படைப்பதில் ஆர்வம் படைத்தவர். கடந்த 1983-ம் ஆண்டு மணிக்கு 1,019 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் டர்போ ஜெட் காரை நிவேதா பாலைவனத்தில் ஓட்டி கடந்து சாதனை படைத்துள்ளார். 1997-ம் ஆண்டு ஆண்டில் கிரீன், மணிக்கு 1228 கி.மீட்டர் வேகத்தில் ஓட்டி சாதனை படைத்த சூப்பர் சோனிக் கார் இவர் தலைமையில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF