Friday, November 12, 2010

பாரிய விண்வெளி தொலைநோக்கி

மனிதரால் இதுவரை காலமும் செய்யாத அளவு பாரிய விண்வெளித் தொலைநோக்கி ஒன்றை பெரும் பொருட்செலவில் நாசா தயாரித்துவருகிறது. 1 அல்ல 2 அல்ல சுமார் 6.5 பில்லியன் டாலர் செலவில் இது அமைக்கப்பட்டுவருவதோடு, இதற்காகன செலவீனங்களையும் விண்வெளி ஆராட்சி மையம் அங்கிகரித்துள்ளது. சுமார் 2015ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் விண்வெளியில் ஏவப்படவிருக்கும், இந்த தொலைநோக்கிக்கு, ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி என பெயர் சூட்டப்பட்டுளது. இதுவரை காலமும் விண்ணில் ஏவப்பட்ட தொலைநோக்கிகளைக் காட்டிலும் சுமார் 80 மடங்கு அதிக சக்திவாய்ந்த தொலைநோக்கியாக இது இருக்கும் எனக் கருதப்படுகிறது.

பால்வெளியில் உள்ள காஸ்மொஸ் வெள்ளிக்கூட்டத்தை ஆராயவும், அதனை துல்லியமாகப் படம் பிடிக்கவும் இது பயன்படுத்தப்படுவதோடு, 5 ராக்கெட்டுகள் கொண்டு விண்ணில் ஏவப்பட்டு, பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கி.மீ தூரம் சென்று அங்கிருந்து சில அரியவகை கிரகங்களை இது படம் எடுக்கவும் உள்ளது. பல மில்லியன் தூரத்துக்கு அப்பால் உள்ள பொருட்களை துல்லியமாகப் படம் எடுக்கும் ஆற்றல் மிக்க இந்த தொலைநோக்கியால் வேற்றுக் கிரகத்தில் மனிதர்கள் உள்ளார்களா ? என்ற சந்தேகத்தையும் இது தீர்க்கலாம் எனவும் எண்ணப்படுகிறது.

குறிப்பாக பல கிரகங்களை இது துல்லியமாகப் படம் எடுக்க இருப்பதால், பூமியை ஒத்த கிரகங்களை கண்டுபிடிப்பது மிக இலகுவாகிவிடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இத் தொலைநோக்கி விண்ணைச் சென்றடைந்த பின்னர் தனது செயல்பாட்டை எவ்வாறு ஆரம்பிக்கும் என்பதை இக் காணொளி விளக்குகிறது. இதன் ஆயுட்காலம் சுமார் 10 வருடங்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.










பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF