ஜார்ஜ் வேறு யாருமல்ல இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஏற்பட்ட ஒரு விமான குண்டுவெடிப்பில் நொறுங்கிச் சிதறிய விமானத்தின் உலோகக் கழிவுகளை கொண்டு செய்யப்பட்ட ஒரு ஹுயூமனாய்டு ரோபோ. இதற்கென்று சிறப்பான தகுதிகள் ஏதும் இல்லை.
மெதுவாக மனிதர்கள் போல நடக்கும். ஆனால் இது தான பிரிட்டனின் முதல் ரோபோ என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 1950 இல் முன்னாள் RAF அதிகாரியால் 6 அடி உயரத்துடன் வடிவமைக்கப்பட்டது ஜார்ஜ்.
அந்த காலகட்டங்களில் டோனி சேல் என்ற அதிகாரி வெறுமனே £15 மதிப்புள்ள உலோகக் கழிவுகளை கொண்டு உருவாக்கிய நடக்கக் கூடியதும் பேசக்கூடியதுமான ஜார்ஜ் உலகத்தையே பிரமிக்க வைத்த ஒரு அரிய கண்டுபிடிப்பாக கருதப்பட்டது.
அதன் பின் ஏற்பட்ட நவீன தொழில் நுட்ப யுக்திகளால் பல விதமான சூப்பர் ரோபோக்கள் வர ஆரம்பித்து விட்டதால் இது ஒரு கண்டுபிடிப்பாகவே யாருக்கும் படவில்லை. அண்ணளவாக 45 வருடங்களாக வண்டிக் கொட்டகையில் வைத்துப் போட்டப்பட்டு தூசி படர்ந்திருந்த ஜார்ஜ் தற்போது மீண்டும் புத்துயிர் பெற்று நடமாட ஆரம்பித்துள்ளது. இததனை வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஜார்ஜ்க்கு புத்துயிரூடியத்தில் மிகுந்த மகிழ்வுடன் உள்ளார் டோனி சேல்.