வாஷிங்டன்: உலகில் வாழும் குடிமக்களுக்கு ஏதாவது ஒரு பானம் விருப்பமானதாக இருக்கும். அதனை பெறுவதற்காக எவ்வளவு விலையும் கொடுக்க தயாராக இருப்பார்கள். அதற்கேற்றார்போல் வந்துள்ளது டீ விலை. சீனா மற்றும் ஹாங்காங்கில் விளையும் டா ஹங் பாவோ என்றழைக்கப்படும் டீதான் மற்ற டீ வகைகளுக்கெல்லாம் ராஜா என்றழைக்கப்படுகிறது.
முன்னாள் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் சீனா சென்ற போது இந்த டியை தான் ருசித்தாராம். இதில் உள்ள நறுமணம் மீண்டும் சுவைக்கத் தூண்டுமாம்.ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்கு விற்பனைக்காக வரும் 100 டீ பாக்ஸ்கள் இரண்டே மாதங்களில் விற்று தீர்ந்து விடுமளவிற்கு அமெரிக்கர்களின் மனத்தை மயக்கிவைத்துள்ளது. 2011 ஆம் ஆண்டிற்கான ஆர்டர் பதிவிற்கு வெயிடிங்கில் இருக்க வேண்டியுள்ளது. இதன் விலை அதிகம் ஒன்றும் இல்லை . 50 கிராம் டீ விலை சுமார் 2 ஆயிரத்து 160 டாலர்கள் மட்டுமே.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF