Sunday, November 21, 2010

ஆப்கனில் ஊழலை ஒழித்துக் கட்ட கர்சாய் நடவடிக்கை எடுக்காவிட்டால் கனடாவின் நிதி உதவி கிடைக்காது - ஸ்டீபன் ஹார்ப்பர்



ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் முனைப்புடன் செயல்பட்டு அதை முற்றிலுமாக ஒழித்துக் கட்டும் வரை வெளிநாடுகளிடமிருந்து நேரடி நிதி உதவியை ஆப்கானிஸ்தான் எதிர்பார்க்க முடியாது என நேட்டோ நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டு நேற்று ஊடகங்களை சந்தித்த பிரதமர் ஹார்ப்பர் கூறியுள்ளார்.

நேற்று போர்ச்சுக்கல்லில் நடைபெற்ற நேட்டோ நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்ற கர்சாய் ஆப்கானிஸ்தானிற்கு நேட்டோ நாடுகள் அளிக்க விரும்பும் நிதி உதவிகளை சர்வதேச அமைப்புக்கள் மூலம் வழங்காமல் நேரடியாக வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

அதன் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த ஹார்ப்பர் ஆப்கானிஸ்தான் அரசுக்கு பலதரப்பட்ட சவால்கள் இருப்பது உண்மை என்பது அனைத்து நாடுகளுக்கும் தெரிந்த ஒரு விடயம் தான். அதில் எந்த ரகசியமும் இல்லை.

அதற்காக எந்தக் கட்டுப்பாடுகளுமின்றி ஆப்கன் அரசுக்கு கனடாவால் நிதி உதவி செய்ய முடியாது என உறுதிபடக் கூறினார். இதையடுத்து கனடாவும் ஆப்கனிலிருந்து விரைவில் படைகளை திரும்பப் பெற்றுக் கொள்ளும் முடிவை எடுக்க வேண்டும் என அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF