Monday, November 8, 2010

உலகின் ஐந்தாவது உயரமான கோபுரம் இலங்கையில்


இலங்கையில் அமைந்துவரும் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்துக்கும் நிதியுதவி அளித்து, ஒப்பந்ததாரராக ஒப்பந்தம் பெற்றுவரும் சீன அரசாங்கம் இன்னொரு பாரிய திட்டத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளது

உலகின் ஐந்தாவது உயரமான கோபுரம் இலங்கையில் கட்டப்படவுள்ளது. இத்திட்டத்திற்கான புதிய ஒப்பந்தத்தை சீன அரச நிறுவனமே ஏற்றுள்ளது. இந்தத் திட்டத்திற்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த அடுத்த மெகா திட்டமான இந்தக் கோபுரத்துக்கு "தாமரைக் கோபுரம்" எனப் பெயரிடப்படவுள்ளது. 350 மீற்றர் உயரத்தில் கட்டப்படவுள்ள இதன் ஒட்டுமொத்த வடிவம் மற்றும் தோற்றம் ஆகியன 20 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த ஒரு தாமரை போல இருக்கப் போகிறது.

இக்கோபுரத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது மாடிகள் ஊடக ஒளிபரப்புக்கும், தொலைத்தொடர்பு முறைக்கும் பயன்படுத்தப்படவுள்ளது. ஒரு ஷொப்பிங் கொஙம்பிளக்ஸ் உள்ளடங்கலான 4 கீழ்த்தளங்களும் அமைக்கும் திட்டமுள்ளதாம். மேலும், உச்சியிலுள்ள மாடிக்குச் செல்ல 30 செக்கன் மட்டுமே எடுக்கத்தக்க மாதிரி அமைக்கப்படவுள்ளது. உச்சியில் இரவுக் கேளிக்கை விடுதிகள் அமைக்கப்படவுள்ளன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF