உலகில் தற்போது சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளது. அதிகப்படியான கார்பன் வெளியேற்றப்படுவதால் இதுபோன்று மாசு ஏற்பட்டு மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில் கடலில் மிதக்கும் நகரங்களை உருவாக்க ஜப்பான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஜப்பானில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கடலில் மிதக்கும் நிலங்களை உருவாக்கி அதன் மூலம் விவசாயம் செய்யப்படுகிறது. கடலில் எங்கு பார்த்தாலும் பசுமை மயமாக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மிதக்கும் நகரங்கள் உருவாக்கப்பட உள்ளன.
இந்த திட்டம் பசிபிக் கடலில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கடலில் 1 கி.மீட்டர் தூரத்துக்கு நகரம் அமைக்கப்பட உள்ளது. இங்கு 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மக்கள் வரை வாழ முடியும்.
இந்த நகரங்களை இணைக்கும் வகையில் மிதக்கும் சாலைகள் அமைக்கப்படுகின்றன. இவ்வாறு அமைக்கப்படும் நகரங்கள் மற்றும் கிராமங்களில் புல்வெளிகள் மற்றும் வனப்பகுதியும் உருவாக்கப்படுகிறது.
இவை மிக மெல்லிய உலோக கலவையுடன் கடல் நீரில் உள்ள மெக்னீசியம் மூலம் தயாரிக்கப்படும் உலோகத்துடன் கலந்து உருவாக்கப்படும்.எதிர்காலத்தில், இது போன்ற கற்பனை நகரம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் மாசுபடாத புதிய சமுதாயம் ஏற்படும்