
சீனாவின் பரபரப்பான ஷாங்காய் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்ற தீவிபத்தில் 53 பேர் பலியாகியும்,
நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வருகிறது. நேற்று இடம் பெற்ற இப் பயங்கர தீவிபத்தில் மேலும் பலர் இறந்திருக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
திருத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த 28 மாடிக் கட்டடித்தின் கீழ் பகுதியில் வணிக வளாகமும், மேல் பகுதியில் குடியிருப்புகளும் இருந்துள்ளது. தீவிபத்து ஏற்பட்ட தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினர் , கடுமையான போராட்டத்திற்குப் பின் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
கட்டிடத்தின் பல பாகத்திற்கும் தீ பரவியதைத் தொடர்ந்து பலர் கட்டடித்தின் மேற்பகுதிக்குச் சென்றதைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர்கள் மூலம் அவர்கள் காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கபபடுகிறது.
