Thursday, November 18, 2010

மிக அரிய இளஞ்சிவப்பு ரத்தினக் கல் பொறிக்கப்பட்ட மோதிரம் 29 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட்களுக்கு விற்பனை


மிக அரிய இளஞ்சிவப்பு ரத்தினக்கல் பொறிக்கப்பட்ட மோதிரமொன்று 29 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஆபரணம் ஒன்றிற்காக செலுத்தப்பட்ட மிகக் கூடுதலான தொகை இதுவெனக் கருதப்படுகின்றது.
24.78 கரட் உடைய இரத்தினக் கல் ஆபரணமே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சொத்பெய் ஏலத்தில் இந்த ஆபரணம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் நியூ யோர்க்கை சேர்ந்த நபர் ஒருவர் இந்த ஆபரணத்தை கொள்வனவு செய்திருந்த போதிலும் நீண்ட காலமாக அதனை ஏலத்தில் விடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் 2008ம் ஆண்டில் 35 கரட் எடையுடைய இரத்தினக் கல் ஒன்று 15.2 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
லுசர்ன் கிராப் என்ற ஆபரண வர்த்தகர் குறித்த இளஞ்சிவப்பு ரத்தினக்கல் பொறிக்கப்பட்ட மோதிரத்தை 29 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட்கள் கொடுத்து கொள்வனவு செய்துள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF