
நியூசிலாந்தில் மேற்கு கடற்கரையில் தெற்கு தீவுகள் (சவுத் ஐலேண்ட்ஸ்) உள்ளது. இங்குள்ள பைக்ரிவர் பகுதியில் கிரேமவுத் என்ற இடத்தில் நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. அங்கு அதிக அளவில் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நேற்று மதியம் அங்கு சுரங்கத்துக்குள் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
இதனால் சுரங்கத்துக்குள் செல்லும் காற்றோட்ட வசதி தடைபட்டது. இந்த சுரங்கம் சுமார் 400 அடி ஆழத்தில் உள்ளது. இதனால் சுரங்கத்துக்குள் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மிக அவதிக் குள்ளாகி இருக்கின்றனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சுரங்கு தொழிலாளர்களின் குடும்பத்தினர் அங்கு கூடிவிட்டனர்.
சுரங்கத்தின் மேல் தளத்தில் சோகமே உருவாக காத்திருக்கின்றனர். இந்த சுரங்கத்துக்குள் சுமார் 27 தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு 36 பேர் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களில் 2 பேர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள்.
இதற்கிடையே சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது. மீட்பு குழு அங்கு விரைந்துள்ளது. அவர்கள் அதற்கான நடவடிக்கையில் தீவிரமாக உள்ளனர்.