
வாஷிங்டன் : "அமெரிக்க விமான நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள முழு உடல் பரிசோதனைக் கருவிகள், நாட்டின் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளத் தேவையானவைதான்' என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். இரட்டைக் கோபுரத் தகர்ப்புக்குப் பின் அமெரிக்காவின் பல்வேறு விமான நிலையங்களில், முழு உடல் பரிசோதனைக் கருவிகளான, "ஸ்கேனர்கள்' வைக்கப்பட்டுள்ளன.
இக்கருவிகள், தன்னைக் கடந்து செல்லும் ஒருவரது உடலை முழுமையாகக் காட்டும்.அமெரிக்காவைச் சூழ்ந்துள்ள பயங்கரவாத அச்சுறுத்தல்களை சமாளிக்கவும், தடுக்கவும் இக்கருவிகள் பயன்படும் என்பதால் இவை அனைத்து விமான நிலையங்களிலும் பொருத்தப்பட்டுள்ளன. எனினும் விமானப் பயணிகளில் ஒரு தரப்பினர் இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தனிநபரின் அந்தரங்கம் வெளிப்படையாக்கப் படுவதாக அவர்கள் ஆட்சேபித்து வருகின்றனர். இதுகுறித்து அமெரிக்க அதிபர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "நாம் இதைக் கடைப்பிடிக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். இதுகுறித்த மக்களின் எண்ணங்களை நான் அறிவேன். என்றாலும், விமானத்தைத் தகர்த்து அதில் உள்ள நூற்றுக்கணக்கான பேர் பலியாகும் சூழலைத் தவிர்க்க வேண்டும் என்றால், நான் உட்பட நம் அனைவருக்கும் இந்தப் பாதுகாப்பு அவசியம்' என்று தெரிவித்துள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF