Wednesday, November 17, 2010

ஆபத்தான ஹைபோகிளைசீமியா



ரத்தத்தில் குறைந்த அளவு சர்க்கரைச் சத்து இருப்பதை ஹைபோகிளைசீமியா என்கிறார்கள். டைப்&1 சர்க்கரை நோயாளிகள் ஒவ்வொரு வாரமும் ஒன்று அல்லது இரண்டு முறை ஹைபோகிளைசீமியா என்ற பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள். சரியான சமயத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால்
இது உயிரையே பறிக்கக்கூடிய அளவுக்கு மிகவும் ஆபத்தானது.


ஹைபோகிளைசீமியா ஏன் ஏற்படுகிறது?

சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் ஒரு சமநிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உணவுக் கட்டுப்பாடு மற்றும் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் & செயல்முறையின் மூலமாக, இன்சுலின் சரியாக சுரக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இன்சுலின் ஊசியைத் தவறாமல் போட்டுக்கொள்வதன் மூலம் சர்க்கரையின் அளவைப் பராமரிக்க முடியும்.

சில வேளைகளில் இயல்புக்கு மாறாக உணவை உண்ணுவும் போது அல்லது எதிர்பாராத உடற்பயிற்சி செய்யும் போது அல்லது இருவேளை சாப்பாட்டுக்கு இடையே அதிக இடைவெளி விடும்போது அல்லது சர்க்கரைச் சத்து குறைந்திடும் வகையில் நொறுக்குத்தீனியை மறந்துவிடும்போது இந்தச் சமநிலை பாதிக்கப்பட்டு, ரத்தச் சர்க்கரைக் குறைவு அல்லது ஹைபோகிளைசீமியா ஏற்படும்.

சுருக்கமாகச் சொன்னால், குறைவான சர்க்கரை இருக்கும் போது இன்சுலின் அதிகமாகச் சுரத்தல், அதிகமான உடற்பயிற்சி, மிகக் குறைந்த கார்போஹைட்ரேட் எடுத்துக் கொள்ளுதல், வெறும் வயிற்றில் மதுபானம் அருந்துதல் போன்றவை ஹைபோகிளைசீமியாவுக்குக் காரணமாகின்றன.

ஹைபோகிளைசீமியா பாதிப்பு, டைப்&2 வகை சர்க்கரை நோயாளிகளிடத்தில் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. இது எந்தெந்த வேளைகளில் ஏற்படக்கூடும் என்பதையும் குறிப்பிட வேண்டும். பொதுவாக, நண்பகல் 11&12, மதிய உணவுக்கு முன்பு, மாலை 4.30 முதல் 6.30 வரை, நடு இரவு, உடற்பயிற்சிக்குப்¢பிறகு போன்ற சமயங்களில் ஹைபோகிளைசீமியா ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.

இந்த நோய்க்கான அறிகுறிகளை முதலில் தோன்றுபவை, அடுத்து வருபவை என இரண்டாகப் பிரித்துக் கொள்ளலாம். முதலில் குளிர்ந்த வியர்வை உண்டாகும். களைப்பாக இருக்கும். கைகளில் நடுக்கம் ஏற்படும். இதயம் அதிக வேகத்தில் துடிக்க ஆரம்பிக்கும். இதைத் தொடர்ந்து தலைவலி, கண் பார்வை மங்குதல், தனது இயல்பான நிலையிலிருந்து வேறுபட்ட செயல்படுதல், குழப்பம், சுயநினைவை இழத்தல், மயங்கிவிழுதல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

ஹைபோகிளைசிமியா வரும் வாய்ப்புள்ளவர்கள் முன் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சர்க்கரைச் சத்துள்ள சாக்லேட், குல்கந்து, சர்க்கரை, தேன் போன்றவற்றில் சிறிதை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். ஹைபோகிளைசீமியாவின் அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தவுடன் கைவசமுள்ள பொருளைச் சாப்பிட்டு நிலைமையைச் சமாளித்துவிடலாம். அவ்வாறு கைவசம் வைத்திருக்காதபட்சத்தில் திடீர் மயக்கம் ஏற்பட்டு நினைவிழக்கும் அபாயம் உண்டு.

வெளியில் செல்ல நேர்ந்தால் மேற்கண்ட பொருள்களை எடுத்துச் செல்வதோடு, உங்களோடு வருபவர் அல்லது நெருங்கிய உறவினர் ஆகியோரிடம் உங்களுக்குள்ள சர்க்கரைக் குறை பாட்டையும் கூற வேண்டும். வெறும் வயிற்றில் இன்சுலினை எடுத்துக்கொள்ளும்போது ஹைபோகிளைசீமியா பிரச்னை ஏற்படலாம். எனவே, இதைப் பற்றி எப்போதும் மருத்துவரிடம் கலாந்தாலோசித்து பிரச்னையைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும்.

ஹைபோகிளைசீமியா பிரச்னையைத் தவிர்ப்பதை முக்கியமான குறிக்கோளாக வைத்து, அதிக ரத்தச் சர்க்கரையைப் பெற்றுக்கொண்டதும் நீங்கள் குணமடைந்துவிட்டதாகக் கருதிவிடக் கூடாது. ஹைபோகிளைசீமியாவின் எதிர் விளைவுகளுக்கு அதிக ரத்தச் சர்க்கரை காரணமாக இருக்கலாம். இதனால் கடுமையான பிரச்னைகளும் உண்டாகலாம். எனவே, மருத்துவரை அணுகி பிரச்னையைப் போக்குவதற்கான தீர்வைப் பெற வேண்டும்.

ஹைபோகிளைசீமியா பிரச்னையால் பாதிக்கப்பட்டவர் விரைந்து நலம் பெற சிகிச்சை முக்கியம். ஹைபோகிளைசீமியா அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனடியாக இரண்டு கட்டி சர்க்கரை அல்லது இரண்டு தேக்கரண்டி சர்க்கரை அல்லது குளுக்கோஸ் போன்றவற்றை நீரில் கலந்து வாயில் போட்டுக்கொள்ளவும். உடனடியாக அறிகுறிகள் மறைந்துவிட்டால் உங்கள்¢பிரச்னை சரியாகிவிட்டது என்று பொருள். நீடித்தால் மேலும் கூடுதல் பங்கு சர்க்கரைச் சத்தைப் பயன்படுத்துங்கள்.

ஹைபோகிளைசீமியா அறிகுறிகள் தென்படத் துவங்கிய உடனே, நீங்கள் செய்யும் வேலையில் இருந்து (இயந்திரங்களை இயக்குவது, வாகனம் ஓட்டுவது…) விலகிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் உங்களுக்கு ஆபத்து நேரிட அதிக வாய்ப்புண்டு. சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF