Monday, November 22, 2010

ஈரானில் பெண்களின் திருமண வயது 16


ஈரானில் கடந்த 1979-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது அங்கு மக்கள் தொகை உயர்ந்து இருந்தது.எனவே, கடந்த 1990-ம் ஆண்டு முதல் இங்கு குடும்ப கட்டுப்பாடு திட்டம் அமல் படுத்தப்பட்டது. 
 
ஆண்களின் திருமண வயது 26 எனவும், பெண்களின் திருமண வயது 24 எனவும் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் அங்கு மக்கள் தொகை பெருக்கம் பெருமளவில் குறைந்தது. 
 
இதற்கு ஈரான் அதிபர் மொகமத் அகமதினேஜாத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மக்கள் தொகை குறைந்ததால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் குறைந்து விட்டதாக குற்றம் சாட்டினார். இது கடவுள் செயலுக்கு எதிரானது. மேலை நாடுகளின் இறக்குமதி திட்டம் என்றார். 
 
எனவே, தான் ஆட்சிக்கு வந்ததும் புதிய திட்டத்தை அறிவித்தார். ஒரு குடும்பத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசு சார்பில் ஊக்க தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.
 
மேலும், ஆண்-பெண் திருமண வயதை குறைக்கவும் வலியுறுத்தி வருகிறார். ஆண்களின் திருமண வயதை 19 அல்லது 20 ஆகவும், பெண்களின் திருமண வயதை 16 அல்லது 17 ஆக குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். 
 
இதன் மூலம் ஈரானின் மக்கள் தொகை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கிறார். தற்போது ஈரானின் மக்கள் தொகை 7 கோடியே 50 லட்சமாகும். அதை இரு மடங்கு அதாவது 15 கோடியாக உயர்த்த திட்ட மிட்டுள்ளார். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF