Friday, November 12, 2010

உலக மகா 'சர்வாதிகாரி' அமெரிக்காதான்: இரான் பதிலடி


தாம் இராணுவ சர்வாதிகாரியாக வருவதாக அமெரிக்க குற்றஞ்சாட்டியிருப்பதற்கு பதிலடி தந்துள்ள இரான், அமெரிக்கா தான் சர்வாதியாக இருந்து கொண்டு பிறர் மீது குற்றஞ்சாட்டுவதாக கூறியுள்ளது. 

இராக்கிலும், ஆப்கானிலும் சண்டையிடுவதற்கு அமெரிக்காதான் வெளிநாட்டுக்கு நூற்றுக்கணக்கான சிப்பாய்களை அனுப்பியதே ஒழிய இரான் அவ்வாறு செய்யவில்லை என்று இரானிய அதிபர் மஃமுட் அஹ்மதிநிஜாத் கூறியுள்ளார். 

தமது நாட்டின் அணுத் திட்டத்துக்கு எதிரான புதிய தடைகளுக்கான அச்சுறுத்தல்களை நிராகரித்துப் பேசிய அவர், அத்தகைய நகர்வுகளினால் தமது நாடு பாதிக்கப்படாது என்றும் கூறினார்.

உலகம் முழுவதும் குழப்பங்களை ஏற்படுத்தி, இரு நாடுகளுக்கிடையே சண்டையை ஏற்படுத்தி ஆயூத வியாபாரம் செய்யும் அமெரிக்க ஈரானை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. உலகம் தோன்றிய காலத்தில் இருந்து அமெரிக்கா என்ற தனி ஒரு நாடு உலக மக்களை கொன்று குவித்தது போல் உலகில் ஹிட்லர் முதற்கொண்டு எந்த சர்வாதிகாரியும் செய்யவில்லை. 

ஹிரோஷிமா, நாகசாகி தொடங்கி வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஈராக், இஸ்ராயில் என்ற கள்ள குழந்தை மூலம் பாலஸ்தீன, பாகிஸ்தானுக்கு ஆயூதம் கொடுத்து இந்தியா பாகிஸ்தான் பிரச்னை, ஸ்ரீ லங்காவில் புலிகளுக்கு உதவி ராஜீவ் காந்தி கொலை, தங்களுக்கு வேண்டாத வெளிநாட்டு தலைவர்களை கொல்வதற்கு பிளக் வாட்டர் கூலிப்படை, தங்களது சி.ஐ.எ. உளவுபிரிவின் மூலம் உலகம் முழுவதும் குழப்பம் ஏற்படுத்துவது, வடக்கு கொரியா தெற்கு கொரியா பிரச்னை, கியூபாவில் பிரச்னை, உலகம் முழுவது உள்ள நாடுகளில் தனது ராணுவ தளங்களை அமைத்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருவது.

தனது ராணுவ தளத்தை நிறுவ இடம்தாராத நாட்டின் மீது தீவிரவாதிகள் இருக்கிறார்கள் பேரழிவு ஆயூதம் இருக்கிறது என்று போர்தொடுப்பது. இல்லை பக்கத்துக்கு நாட்டுக்கு ஆயூதம் கொடுத்து சண்டையை மூட்டிவிட்டு சமாதானம் செய்வது போல்வந்து தனது ராணுவ தளத்தை நிறுவுவது , உலகில் ஏதாவது பெரிய இயற்க்கை பேரழிவுகள் ஏற்ப்பட்டால் அதற்க்கு உதவி செய்கிறேன் பேர்வழி என்று தனது ராணுவத்தை அனுப்புவது உதவி பணிகள் முடிந்தது அங்கு உள்ளநாட்டு பாதுகாப்பு சரியில்லை என்று காரணம் சொல்லி தனது ராணுவத்தை அங்கே நிறுத்துவது.இப்படி அடுக்கி கொண்டே போகலாம். 

தன்னை கண்டு இந்த உலகம் பயப்பட வேண்டும் தான் தான் இந்த உலகின் நம்பர் ஒன் வல்லரசாக இருக்கவேண்டும் என்று அமெரிக்கா உலகில் ஏற்படுத்திய அழிவுகள் தான் எத்தனை? எத்தனை? கொன்ற உயிர்கள் தான் எத்தனை? எத்தனை? ஹிரோஷிமா, நாகஷாகியில் போட்ட அணுகுண்டில் மட்டும் ஒரே நேரத்தில் 2 லட்சம் மக்கள் கொல்லபட்டர்கள். அதன் பாதிப்புகள் இன்றுவரை பிறக்கும் குழந்தைகள் ஊனமாக மற்றும் புற்றுநோய் இப்படியாக தொடர்கிறது. அடுத்து வியட்நாம் 35 வருட போரில் அமெரிக்கா பயன்படுத்திய பேரழிவு ஆயூதங்கள் மூலம் அந்த நாடு உருத்தெரியாமல் போகியது. அடுத்து ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் இல் விதவிதமான குண்டுகளை பயன்படுத்தி லட்ச கணக்கான மக்களையும் குழந்தைகளையும் கொன்று குவித்தது. ஈராக் இல் பொருளாதார தடை ஏற்படுத்தி அத்தியாவாசிய மருந்து பொருட்கள் கிடைக்காமல் 1 .5 லட்சம் குழந்தைகள் செத்துமடிந்தது. 

முன்பு ஈரானில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆயிர கணக்கான மக்களை கொன்றது இம்மாம் கொமைனி ஒரு இஸ்லாமிய புரட்சியை ஏற்படுத்தி இவர்களை விரட்டியது இப்ப திரும்ப இரானின் வளர்ச்சி பிடிக்காமல் திரும்பவும் இரானை அழிக்க முற்படுவது. உலகில் நடக்கும் அத்தனை தீவிரவாத நடவடிக்கைகளுக்கும் இது போல் ஆக்கிரமிப்புகளும், அந்நிய நாட்டின் வளங்களை கொள்ளையடிக்க நடத்தும் போர்களும் தான் காரணம். அமெரிக்கா தனது அயல்நாட்டு கொள்கையில் மாற்றம் கொண்டுவருமா? தனது தீவிரவாத போக்கை மாற்றி உலகில் அமைதியை ஏற்படுத்துமா? உலகம் எதிர்பார்கிறது. என்று தனியுமோ இவர்கள் இரத்ததாகம். என்று உலகம் அமைதி பெறுமோ. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF