Thursday, November 18, 2010

உயர் ரத்தக்கொதிப்புக்கு நிரந்தரத் தீர்வு(kidney-blood-pressure)


உலகில் பல கோடி மக்கள் அவதியுறும் ஒரு பாரிய நோயாக உயர் ரத்தக்கொதிப்பு உள்ளது. பொதுவாக பரம்பரை வருத்தமாகவும், சர்க்கரை வியாதியுள்ளவர்களையும் இது தாக்குகிறது. உடலில் ரத்தம் பயணிக்கும் நாடி நரம்புகள் சுருங்கி விரியும் தன்மை கொண்டவை. அதனால் இதயம் கடுமையாகத் துடிக்கும்போது, ரத்த அழுத்தம் அதிகரிக்கும், அப்போது நாடி நரம்புகள் விரிவடையும். இத் திறன் நாளடைவில் பாதித்து, அவை சுருங்கி விரியும் தன்மை பாதிப்பதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதனை மாத்திரை கொண்டே கட்டுப்படுத்தி வந்தனர் மருத்துவர்கள். பொதுவாக உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கோபம் அதிகமாக வரும், மாரடைப்பு ஏற்படும், சிறுநீரகம் பதிக்கப்படும், மற்றும் மூளை நரம்புகள் வெடிக்கும் அபாயமும் உண்டு.

ஆனால் இதனைத் தற்போது மிக எளிதாக மாற்ற முடியும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதில் 99% வெற்றியும் பெற்றுள்ளனர். மனித உடலில் உள்ள சிறுநீரகத்தில் உள்ள குறிப்பிட்ட ஒரு நாளத்தில் உருவாகும் சமிக்ஞைகள் மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதன் மூலமே மூளை நாடி நரம்பை விரிவாக்கவும் சுருங்கவும் செய்கிறது. கால்கள் (தொடை) வழியாக நீளமான ஊசி ஒன்றைச் செலுத்தி அதை சிறுநீரகம் வரை கொண்டுசென்று, குறிப்பிட்ட அந்த நரம்புக்கு சில வகையானமின் சாரத்தைப் பாய்ச்சி அவற்றைத் தூண்டுவதன் மூலம் அந்நரம்புகள் பழைய நிலைக்கு கொண்டுவரப்படுகின்றன. அதனால் அவை சமிக்ஞைகளை சரியாக மூளைக்கு அனுப்பும். எனவே ரத்த அழுத்தம் சரியான முறையில் பேணப்படுவதாக, தற்போது சிகிச்சைபெற்றுக்கொண்ட நபர் தெரிவித்துள்ளார்.

இவர் தனது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த தினம்தோறும் 12 மாத்திரைகளை எடுத்துவந்ததாகக் கூறப்படுகிறது. இப்போது மாத்திரைகள் ஏதும் பாவிக்காமல் அவர் இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF