Saturday, November 6, 2010

அதே தாஜ் ஹோட்டலில் தங்குகின்றேன் - தீவிரவாதிகளுக்கு சவால் விடுத்தார் ஒபாமா!


மும்பைக்கு இன்று நண்பகல் வந்திறங்கிய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும், அவரது மனைவி மிச்சேலும் தாஜ் ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த மும்பை தாக்குதல் நினைவு புத்தகத்தில் கையெழுத்திட்டனர்.
பின்னர் மும்பை தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் ஒபாமா 6 நிமிட உரையாற்றினார். மும்பைக்கு வந்ததற்கும், தாஜ் ஹோட்டலில் தங்குவதற்கும் முக்கிய காரணம் இருக்கிறதென்றார்.
கடந்த 2008 செப்டெம்பர் நவம்பர் 26 ம் திகதி தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டனர். அதே ஹோட்டலில் இப்போது தங்குகிறேன். இது தீவிரவாதிகளுக்கு சவால் விடுவதற்காகவே என்றார்!
மேலும் அன்றைய தாக்குதலை நாம் என்றும் மறக்க முடியாது. அந்த தாக்குதலை இந்திய மக்கள் மிகுந்த மன பலத்துடன் எதிர்கொண்டார். அந்த கொலையாளிகளிடம் மக்கள் பணிந்து விடவில்லை. அந்த தாக்குதலுக்கு அடுத்த நாளிலேயே மும்பை நகரம் இயல்பு நிலைக்கு திரும்பியது. தாக்குதலால் முடங்கிவிடாமல் மக்கள் தத்தமது பணிகளை கவனிக்க தொடங்கிவிட்டனர்.

ஹோட்டலும் முடங்கிவிடாமல் மீண்டும் எழுச்சி கொண்டு நின்றது. இது இந்திய மக்களின் பலத்தை வெளிக்காட்டியது.

தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும். மும்பை போன்ற மற்றொரு தாக்குதல் நடந்துவிடாமல் தடுக்க இரு நாடுகளும் தேவையான உளவு ரகசியங்களை பகிர்ந்து வருகிறோம் என்றார்.
இதேவேளை ஒபாமாவின் இப்பயணத்தின் போது, இந்தியா - அமெரிக்கா இடையே பாதுகாப்பு துறையிலும், அணு சக்தி துறையில் மிக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

12 பில்லியன் டாலர் அளவுக்கான இந்த ஒப்பந்தங்கள் மூலம் அந்த நாட்டிடமிருந்து இந்திய போர் விமானங்கள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை வாங்கவுள்ளதுடன், இந்தியாவில் அமெரிக்க எரிசக்தி துறை நிறுவனங்கள் அணு உலைகளை அமைக்கவுள்ளன.

இதனால் அமெரிக்காவில் புதிதாக 60,000 வேலைவாய்ப்புக்கள் உருவாகும் என தெரிவிக்கப்படுகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF