Sunday, November 28, 2010

டுபாயில் புஜ்ரி கலிஃபா அருகில் மற்றுமொரு பிரமாண்ட கட்டிடம்


உயரமான கட்டிடங்களால், உலகின் உயரத்தை எட்டிப்பிடித்துள்ள டுபாய், 2011 இல் தனது புதிய பல கட்டிடத்தொகுதிகளை திறக்கவுள்ளது.
இதில் முதன்மையானது, பொதுமக்கள் பாவணைக்கான உலகின் மிக உயரமான கட்டிடமாக இடம்பிடிக்க போகும், பிரின்ஸெஸ் டவர். டுபாயின் புஜ்ரி கலிஃபா கட்டிடத்திற்கு அருகாமையில் 107 மாடிகளை கொண்டதாக அமைக்கப்படும் இக்கட்டிடம் அடுத்தவருடம் திறக்கப்படவிருக்கிறது.
உலகின் உயரமான கட்டிடங்கள், மற்றும் தங்குமிடவசதிகொண்ட கட்டிடங்களுக்கான கவுன்சிலால் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் படி இதுவரை பொதுமக்கள் பாவனைக்கான உயரமான கட்டிடமாக, அஸ்திரேலியாவில் கோல்ட் கோஸ்ட் கட்டிடம் திகழ்கிறது. 323 மீற்றர் கொண்டதும் 78 மாடிகளை கொண்டதுமாக இக்கட்டிடம் கட்டப்பட்டது.
தற்போது இதை முறியடிக்கும் முயற்சியில் டுபாயின் பிரின்ஸெஸ் டவர் நிறுவப்பட்டுள்ளது. இதைவிட, 91 மாடிகளை கொண்ட எலைட் ரெசிடென்ஸ் எனும் கட்டிடமும் டுபாய் மரியானாவில் கட்டிமுடிக்கபப்ட்டுள்ளது. இதுவும் அடுத்தவருட ஆரம்பத்தில் திறக்கப்படவிருக்கிறது. இவற்றின் மூலம் அடுத்த வருட முடிவுக்குள் டுபாய் நகரம் மிகப்பெரும் அபிவிருத்தி தேசமாக தன்னை பிரகடனப்படுத்திக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF