அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து போர் ஒத்திகை நடத்துவதால் கொரிய தீபகற்பத்தில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வட கொரியா எச்சரித்துள்ளது.
தென் கொரியாவின் லியோன் பியோல் தீவில் வட கொரியா குண்டுகளை வீசி தாக்கியது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக தென் கொரியாவும், வட கொரியா மீது தாக்குதல் நடத்தியது.
இதைத் தொடர்ந்து வட கொரியா மீது போர் தொடுக்க வேண்டும் என்று தென் கொரியாவை சேர்ந்த நூற்றுக்கணக்கான முன்னாள் போர் வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 75 போர் விமானங்கள், 6 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் வாஷிங்டன் என்ற போர் கப்பல் கொரிய தீபகற்பத்திற்கு வந்துள்ளது. தற்போது தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து இராணுவ ஒத்திகை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் அமெரிக்க இராணுவ தளபதி வால்டர் ஷா தாக்குதலுக்கு ஆளான லியோன் பியோல் தீவிற்கு சென்றுள்ளார். இதையடுத்து கொரிய தீபகற்பத்தில் எந்த நிமிடத்திலும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வட கொரிய அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
வட கொரியாவின் மேண்மைக்கும், இறையாண்மைக்கும் பங்கம் வந்தால் தென் கொரிய படைகள் நொறுக்கப்படும் என செய்திக் குறிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வட கொரிய மக்கள் எதிரி படைகளை தோற்கடிக்க தயாராக இருப்பதாகவும், வாய்வார்த்தைகளால் மோதிக் கொள்ளும் சூழல் முடிந்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF