Saturday, November 27, 2010

பளீர் வெளிச்ச ஸ்டார்களுடன் பிரமாண்ட நட்சத்திர கூட்டம்



பாஸ்டன்: சூரியன் போன்ற பல லட்சம் கோடி நட்சத்திரங்கள் கொண்ட தொகுப்பு பால்வழித் திரள் அல்லது கேலக்சி எனப்படுகிறது. வானத்தில் பார்த்தால் தெரியக்கூடிய வரை உள்ளதே இந்த கேலக்சி. இதுபோல சுமார் 10 மடங்கு வரை பெரிதான மற்றும் 1200 கோடி வயதான நட்சத்திரக் கூட்டங்களை அமெரிக்க
ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் மசாசூசட்ஸ் மாநிலத்தில் உள்ள டஃப்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

மிகப் பழமையான, பெரிதான நட்சத்திரக் கூட்டங்களை தற்போது கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து தலைமை ஆராய்ச்சியாளர் டேனிலோ மார்செசினி கூறியதாவது: நமது கேலக்சி தோன்றியபோதே மேலும் பல நட்சத்திரக் கூட்டங்கள் விண்வெளியில் இருந்துள்ளது. நமது கேலக்சியில் இருந்து வெகு தொலைவில் ஏராளமான நட்சத்திரக்கூட்டங்கள் மிக பிரமாண்டமான அளவில் இருக்கின்றன.

இவை சுமார் 1200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானவையாக இருக்கலாம் என்று தெரிகிறது. நம் கேலக்சியைவிட இவை 5 முதல் 10 மடங்கு பெரிதாக இருக்கும் என்றும் தெரிகிறது. இதில் உள்ள நட்சத்திரங்கள் பல மடங்கு பிரகாசமாகவும் உள்ளன. இதுகுறித்து தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது. இவ்வாறு டேனிலோ கூறினார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF