நேற்றிரவு பிரிட்டனின் பல இடங்களில் வெப்பநிலை -10 டிகிரிக்கும் மேல் போனது. எதிர்பார்த்ததை விட மிக அதிகமான பனிப்பொழிவும் இருந்தது. ஸ்காட்லாந்து , வட கிழக்கு இங்கிலாந்து பகுதிகளில் அண்ணளவாக 15 அங்குல பனிப்பொழிவு நேற்று பதிவாகியுள்ளது
மேலும் வானிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் இந்த பகுதிகளில் 40 செண்டிமீட்டர் அளவிற்கு பனிபொழிவு இருக்கும் என்ற எச்சரிக்கைகளும் வெளியாகியுள்ளன
தேவையின்றி சாலைகளுக்கு வருவதை தவிர்த்து உள்ளேயே இருக்குமாறு பொதுமக்களுக்கு போலீஸ் சார்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது
மோசமான் வானிலையினால் பல இடங்களில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகியும் வருகின்றன. ஷெப்பீல்டு அருகே எம்.1 நெடுஞ்சாலையில் நேற்று நடந்த சாலை விபத்தில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் நாயை காப்பாற்றச் சென்ற ஒருவர் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று விடுமுறை நாள் என்பதால் ஷாப்பிங் சென்ற மக்கள் பனிப்பொழிவினால் மிகுந்த அவதிக்குள்ளாகினர்
இன்றிரவு பிரிட்டன் -17 டிகிரி வெப்பநிலையில் நடுங்கும் - பலத்த வானிலை எச்சரிக்கை
இதுவரை கண்டிராத அளவிற்கான உறைய வைக்கும் வெப்பநிலை இன்றிரவு பிரிட்டனை தாக்கவிருப்பதால் மக்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடனும் தேவையான முன்னேற்பாடுகளுடனும் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
1985 க்கு பின் இன்று தான் வெப்பநிலை சாதனை அளவையும் விட குறைந்திருப்பதாகவும் புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன. இன்றிரவு பயணங்களை தவிர்க்குமாறும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் போலீஸ் எச்சரித்துள்ளது.
ஆர்டிக் பகுதிகளில் காணப்படும் பறவை ஒன்று இன்று பிரிட்டனிலும் காணப்பட்டதால் இந்த வாரத்தில் வெப்பநிலை மேலும் குறையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரத்தின் பிற்பகுதியில் ஸ்காட்லாந்தில் வெப்பநிலை -20 டிகிரியை நெருங்கும் என்பதால் ஸ்காட்லாந்தில் வசிக்கும் மக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடனே இந்த மாதம் முழுவதும் இருக்க வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதற்கு முன்னர் நவம்பர் 14, 1919 இல் ஸ்காட்லாந்தில் மிகவும் குறைந்த பட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த வருடம் அதையும் விட வெப்பநிலை குறைவாக பதிவாகலாம் என வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF