Monday, November 22, 2010

வரவு செலவுத்திட்டத்தில் வரி அதிகரிப்புகள்: வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புக் கட்டணம் உயர்வு



2011ம் ஆண்டுக்கான இலங்கையின் வரவு செலவுத்திட்டத்தில் வரிகளை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.  சில விடயங்களில் மட்டும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் வரவு செலவுத்திட்டத்தின் மூலம் சிறீலங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் எயார்  என்பவற்றுக்கு எதிர்வரும் பத்து வருடங்களுக்கு வரி விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஐம்பதினாயிரம் மில்லியன்களுக்கும் அதிகமான பொதுப்பணத்தை வீணடிப்புச் செய்துள்ள நிலையிலேயே மிஹின் எயாருக்கு தற்போது வரி விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
வரி விலக்கின் மூலம் அவற்றின் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி  தெரிவித்துள்ளார். 
அத்துடன் உள்நாட்டு தொலைபேசி அழைப்பிற்கான கட்டணம் ஒரு ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டு அழைப்புகளுக்கு இரண்டு ரூபாவினால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிகரட், மதுபான மற்றும் சூதாட்ட வரிகள் முப்பத்தி ஐந்து தொடக்கம் நாற்பது வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF